திருப்பூரில் ஆசிரியரை தாக்க முயன்ற மாணவரின் செயல் வேதனையளிக்கிறது... கவலையும், கண்டனமும் தெரிவித்த ராமதாஸ்!!

Published : Apr 21, 2022, 03:40 PM IST
திருப்பூரில் ஆசிரியரை தாக்க முயன்ற மாணவரின் செயல் வேதனையளிக்கிறது... கவலையும், கண்டனமும் தெரிவித்த ராமதாஸ்!!

சுருக்கம்

திருப்பூரில் ஆசிரியரை தகாத வார்த்தைகளில் திட்டியதோடு, அவரை அடிக்க முற்பட்ட மாணவரின் செயலுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் ஆசிரியரை தகாத வார்த்தைகளில் திட்டியதோடு, அவரை அடிக்க முற்பட்ட மாணவரின் செயலுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் மானூர் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அங்கே 2 தினங்களுக்கு முன்பு 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெற்றுள்ளது. தேர்வில் மாணவர்களை கண்காணிப்பதற்காக அந்தப் பள்ளியின் தாவரவியல் ஆசிரியரான சஞ்சய்காந்தி என்பவர் ஹால் சூப்பர்வைசராக சென்றிருந்தார். இந்த ஆசிரியர் தர்மபுரி பகுதியை சேர்ந்தவர், ராணிப்பேட்டை மாவட்டம் கொடைக்கானல் அரசு பள்ளியில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு பணி மாறுதல் பெற்று இந்தப் பள்ளிக்கு வந்துள்ளார். அப்போது மாணவர்களை ரெக்கார்டு நோட்டை எழுதி வந்து சமர்ப்பிக்குமாறு  அறிவுறுத்தியுள்ளார். இதில் சிலர் மாணவர்கள் எழுதாததை ஆசிரியர்கள் கண்டித்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் சிலர் ஆசிரியரை தகாத வார்த்தைகளால் பேசி அவரை தாக்க முயன்றுள்ளனர்.  இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சம்பந்தப்பட்ட மாணவன் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் பள்ளிகளில் பாடங்களுக்கு இணையாக நீதி போதனைகளுக்கும், ஒழுக்க போதனைகளுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரையடுத்த மாதனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தாவரவியல் ரெக்கார்ட் நோட் எழுதாததற்காக கண்டித்த ஆசிரியரை மாணவர் ஒருவர் ஆபாச வார்த்தைகளால் திட்டி தாக்க முயலும் காணொலி வேகமாக பரவி வருகிறது.

 

இந்த நிகழ்வு கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும். தாய், தந்தையருக்குப் பிறகு மாணவர்கள் வாழ்வில் ஆசிரியர்கள் தான் மிகவும் முக்கியமானவர்கள். அவர்கள் தான் மாணவர்களை கரை சேர்க்கும் ஓடங்கள். கடவுளாக மதிக்க வேண்டியவர்களையே திட்டி, தாக்க முயலும் அளவுக்கு சில மாணவர்களிடம் ஒழுக்கக்கேடு ஏற்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. திரைப்படங்களில் ஆசிரியர்கள் தவறாக சித்தரிக்கப்படுவதும், சமூகச் சூழலும் தான் இதற்கு காரணம் ஆகும். இந்த நிலை மாற்றப்பட வேண்டும். பள்ளிகளில் பாடங்களுக்கு இணையாக நீதி போதனைகளுக்கும், ஒழுக்க போதனைகளுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!