மு.க.ஸ்டாலினுக்கு அறைகூவல் விடுத்த ராமாதாஸ்... செவிசாய்ப்பாரா..?

By Thiraviaraj RMFirst Published May 6, 2021, 3:26 PM IST
Highlights

மூடு… மூடு… மூடு… தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடு. காப்பாற்று… காப்பாற்று… காப்பாற்று…கொரோனா தொற்றிலிருந்து தமிழ்நாட்டு மக்களைக் காப்பாற்று’’எனக் கூறியுள்ளார்.
 

செங்கல்பட்டு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையினால் 14 கொரோனா நோயாளிகள் என்ற அதிர்ச்சி தகவல் வந்தது. வேலூர் மருத்துவமனையில் முன்பு ஆக்சிஜன் பற்றாக்குறையினால் 7 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வந்தன. இதே போல இப்போது திருப்பத்தூரிலும் நடந்திருக்கிறது.

இதுகுறித்து, ‘’திருப்பத்தூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் இன்று காலை அடுத்தடுத்து 4 கொரோனா நோயாளிகள் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. இந்த உயிரிழப்புகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை தான் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்’’ என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி இருக்கிறார்.
 
அவர் மேலும், தமிழ்நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருவது மிகவும் கவலையளிக்கிறது. மிகவும் நெருக்கடியான இந்தக் காலகட்டத்தில் தமிழக அரசு கூடுதல் வேகத்தில் செயல்பட்டு மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவரது பதிவில், ‘’மூடு… மூடு… மூடு… தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடு. காப்பாற்று… காப்பாற்று… காப்பாற்று… கொரோனா தொற்றிலிருந்து தமிழ்நாட்டு மக்களைக் காப்பாற்று என்றும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  மூடு… மூடு… மூடு… தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடு. காப்பாற்று… காப்பாற்று… காப்பாற்று…கொரோனா தொற்றிலிருந்து தமிழ்நாட்டு மக்களைக் காப்பாற்று’’எனக் கூறியுள்ளார்.

click me!