அதிமுகவுக்கு ஆப்பு அடித்த ராமதாஸ்.. நட்டாற்றில் நிற்கும் பாஜக.. உச்சகட்ட விரக்தியில் பாமக எடுத்த பயங்கர முடிவு

By Ezhilarasan BabuFirst Published Sep 15, 2021, 9:59 AM IST
Highlights

சட்டமன்றத் தேர்தல் முடிவு அதிமுக கூட்டணிக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்தது. குறிப்பாக அதிமுகவில் அதிகார மையமாக செயல்பட்டு வந்த சில அமைச்சர்களும் கூட மண்ணை கவ்வும் நிலைமைக்கு தள்ளப்பட்டனர். 

எதிர் வரும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என பாமக முடிவு  செய்திருப்பதாக அக்காட்சியில் தலைவர் ஜி.கே மணி அறிக்கை வெளியிட்டுள்ளார். இது அதிமுக மற்றும் பாஜகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக, பாமக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டன. ஆனாலும் கூட்டணிக் கட்சிகளுக்கிடையே ஒருமித்த கருத்து இல்லாததால், ஒருவரை மாற்றி ஒருவர் கடுமையாக விமர்சிக்கும் போக்கு இருந்து வந்தது. அதேபோல அதிமுகவுக்கு  ஈர்ப்பு மிக்க தலைமை இல்லாததால் மக்கள் மத்தியிலும் அக்கட்சிக்கு பெரிய வரவேற்பு இல்லை. இதனால் கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் வெற்றி பெற்றுது. 

சட்டமன்றத் தேர்தல் முடிவு அதிமுக கூட்டணிக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்தது. குறிப்பாக அதிமுகவில் அதிகார மையமாக செயல்பட்டு வந்த சில அமைச்சர்களும் கூட மண்ணை கவ்வும் நிலைமைக்கு தள்ளப்பட்டனர். தேர்தலில் தோல்வி அடைந்த விரக்தியில் அதிமுக கூட்டணி கட்சிகள் ஒருவரை மாற்றி ஒருவர்  கடுமையாக விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக அதிமுக அமைச்சர் சிவி சண்முகம் தனது தோல்விக்கு பாஜகவும், பாமகவும் தான் காரணம் என பகிரங்கமாக தெரிவித்த கருத்து கூட்டணிக்கிடையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல அதிமுகவால் தான் பாமக தோற்றது எனவும், பாமக தலைவர்கள் பேசியது கூட்டணிக்குள் குழப்பத்தை மேலும் அதிகரிக்க செய்தது. இந்நிலையில் கூட்டணியில் ஒருமித்த கருத்து இல்லாத காரணத்தால், அதிமுக கூட்டணி தொடர்வதில் பெரும் கேள்விக்குறி இருந்து வந்த நிலையில்,  எதிர் வரும் உள்ளாட்சி மன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக பாமக அறிவிப்பு செய்துள்ளது. பூனைக்கு யார் மணி கட்டுவது என காத்திருந்த நிலையில் தற்போது கூட்டணியை விட்டு வெளியேறும் முடிவை பாமக அறிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் ஜி.கே மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-  

தமிழகத்தில் இதுவரை உள்ளாட்சித் தேர்தல் நடத்தாத 9 மாவட்டங்களில் அக்டோபர் 6, 9 ஆகிய 2 தேதிகளில் இரு கட்டமாக வாக்குபதிவு நடக்க உள்ளது. இந்த தேர்தலில் கட்சியின் நிலைபாடு குறித்து முடிவெடுக்க கட்சித் தலைமை நிர்வாகிகள் 9 மாவட்ட துணை பொதுச்செயலாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம்  பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது, இதில் இளைஞரணி தலைவர் அன்புமணி ஆகியோர் வீடியோ கான்பிரன்ஸ் வழியாக கூட்டத்தில் இணைந்தனர், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிட முடிவு செய்யப்பட்டது, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து இன்றும் நாளையும் மனுக்கள் பெறப்படும் இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார். பாமக திடீரென தனியாக போட்டி என அறிவித்திருப்பது அதிமுக மற்றும் பாஜக மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

click me!