
கடந்த டிச 4ஆம் தேதி கார்டியாக் அரெஸ்ட் என்னும் இதய அடைப்பு காரணமாக முதல்வர் ஜெயலலிதா பாதிக்கபட்டார்.
மறுநாள் 5ஆம் தேதி இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. 4ஆம் தேதியும் முதலமைச்சர் இறந்த 5ஆம் தேதியும் முன்னாள் தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் சேகர் ரெட்டியுடன் பல மணி நேரம் தொடர்பு கொண்டு நேரில் வரவழைத்து பேசியிருக்கும் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மறைந்த முதல்வர் ஜெ.வின் லட்சகணக்கான தீவிர விசுவாசிகளும் கோடிக்கணக்கான அபிமான மக்களும் என்னாகுமோ? ஏதாகுமோ? என ஏங்கி தவித்து கொண்டிருந்தனர்.
கோடிக்கணக்கான மக்களின் தவிப்பான நேரத்தில்தான் கடந்த 10 ஆண்டுகளாக ஜெ. வுடன் இருந்து பல்வேறு ஆதாயங்களை அடைந்த ராம் மோகன ராவ் என்னடான்னா தன்னுடைய பணத்த காபந்து பண்றதுக்கு என்ன வழின்னு மும்முரமா வேலை செஞ்சிட்டு இருந்துருக்காரு..!!
ஜெயலலிதாவின் உடல், சடங்குக்காக போயஸ் தொட்ட இல்லத்தில் வைக்கப்பட்ட அந்த இரவில் தொடர்ந்து பல மணி நேரம் தற்போது சிறையில் இருக்கும் சேகர் ரெட்டியிடம் போனில் நேரடியாகவும் வாட்ஸ் அப் மூலமாகவும் பேசியிருப்பது சிபிஐயால் கண்டுபிடிக்கப்பட்டது.
உயர் பொறுப்பில் இருக்கும் ஒருவர் இப்படி இரட்டை நாடகம் ஆடியது மத்திய அரசு அதிகாரிகளையே அதிர்ச்சிக்குள்ளாக்கியதாம்.
மேலும் அடுத்த நாள் ராஜாஜி அரங்கில் ஜெயலலிதா உடல் கிடத்தப்பட்டு பல லட்சம் மக்கள் கூடிய அந்த இடத்தில பிரதமர் முதல் பிரணாப் வரை வந்து சென்றனர்.
அப்போதும் சந்தடி சாக்கில் பின்புறம் உள்ள ரூமிற்கு சென்று தனது பணத்தை பற்றியே பேசியிருக்கிறார் ராம் மோகன ராவ்.
இந்த காட்சிகளை எல்லாம் வைத்து பார்க்கும்போது ஜெயலலிதாவை சுற்றி நடப்பதெல்லாம் நாடகம்தான் என பலர் குறையாய் கூறி வந்த விசயம் ராம் மோகன் ராவின் நடவடிக்கையால் உண்மையாக தெரிகிறது.