இன்று வீடு திரும்புகிறார் கருணாநிதி..!!

 
Published : Dec 23, 2016, 09:13 AM ISTUpdated : Sep 19, 2018, 02:49 AM IST
இன்று வீடு திரும்புகிறார் கருணாநிதி..!!

சுருக்கம்

சென்னை காவேரி மருத்துவமனையிலிருந்து திமுக தலைவர் கருணாநிதி இன்று வீடு திரும்புகிறாா் 

சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தி.மு.க. தலைவர் கருணாநிதி, தொண்டை மற்றும் நுரையீரல் தொற்றால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 15ம் தேதி சென்னை  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

மூச்சுத்திணறல் காரணமாக கருணாநிதிக்கு ட்ரக்கியோஸ்டோமி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து கருணாநிதியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. கருணாநிதி நலமுடன் நாற்காலியில் அமர்ந்து டிவி பார்க்கும் புகைப்படத்தையும் காவேரி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டது. இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்புகிறார். இதனால் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு