"அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவேன்" : சசிகலா புஷ்பா அதிரடி

 
Published : Dec 23, 2016, 10:14 AM ISTUpdated : Sep 19, 2018, 02:50 AM IST
"அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவேன்" : சசிகலா புஷ்பா அதிரடி

சுருக்கம்

அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடப் போவதாக, அந்த கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா கடந்த 5ம் தேதி காலமானார். அதனைத் தொடர்ந்து அவரது தோழி சசிகலாவை அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொள்ளுமாறு அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும், அவர்தான் அடுத்த முதல்வராக பதவியேற்க வேண்டும் எனவும் சில அமைச்சர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், வி.கே.சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கக்கூடாது என சசிகலா புஷ்பா எம்.பி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் என்ற அடிப்படையில் பாெதுச்செயலாளா் பதவிக்குப் போட்டியிட எனக்கு உரிமை உள்ளது என தாெிவித்தாா். உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பொறுத்து, அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவது பற்றி நான் முடிவு செய்வேன் எனவும் திருமதி. சசிகலா புஷ்பா அதிரடியாக கூறினாா். 

அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலா நடராஜன் வருவதை 75 சதவீத அதிமுக தொண்டர்கள் விரும்பவில்லை என்றும்,  கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை நடராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் வற்புறுத்தி, மக்கள் முன் நாடகத்தை அரங்கேற்றி  வருகின்றனர் என்றும் சசிகலா புஷ்பா குற்றம் சாட்டினாா்.

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு