சூடுபிடிக்கும் தமிழக அரசியல்..! ராஜ்யசபா தேர்தல் அறிவிப்பு..!

By Manikandan S R SFirst Published Feb 25, 2020, 10:00 AM IST
Highlights

17 மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் 55 பேரின் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் தமிழகத்தில் இருந்து 6 பதவிகள் அடங்குகிறது.

பாராளுமன்றத்தின் மேலவையான ராஜ்ய சபாவில் உறுப்பினர்கள் அந்தந்த மாநில சட்டப்பேரவையின் எண்ணிக்கையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ராஜ்ய சபா உறுப்பினர்களை மாநில எம்.எல்.ஏ க்கள் வாக்களித்து தேர்வு செய்ய வேண்டும். அவ்வாறு தேர்வாகும் உறுப்பினர்களின் பதவி காலம் 6 ஆண்டுகள் ஆகும். இந்த நிலையில் தற்போது மாநிலங்களவையில் உறுப்பினர்களாக இருப்பவர்களில் 55 பேரின் பதவி காலம் ஏப்ரல் 2 ம் தேதியுடன் நிறைவடைகிறது.

இதையடுத்து அந்த பதவிகளுக்கான தேர்தல் தற்போது அறிவிக்கிப்பட்டுள்ளது. 17 மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் 55 பேரின் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் தமிழகத்தில் இருந்து 6 பதவிகள் அடங்குகிறது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 6 ம் தேதி தொடங்கி 13ம் தேதி வரை நடக்கிறது. மார்ச் 16ல் வேட்பு மனு பரிசீலினையும் 18ல் மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. போட்டி இருப்பின் மார்ச் 26ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக இருக்கும் திருச்சி சிவா, விஜிலா சத்தியானந்த், முத்துக்கருப்பன், சசிகலா புஸ்பா, டி.கே ரங்கராஜன்,செல்வராஜ் ஆகியோரின் பதவி காலம் முடிவடைவதை அடுத்து தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுகவிற்கும் ஆளும் அதிமுகவிற்கும் தலா 3 உறுப்பினர்கள் தேர்வாக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

click me!