டெல்லி கலவரம்; உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும்.!! அமித்ஷா மீது பாயும் ராகுல் காந்தி.!!

By Thiraviaraj RMFirst Published Feb 25, 2020, 9:53 AM IST
Highlights

டெல்லி கலவரம் தொடர்பாக அமைதி காப்பது ஏன்  என உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். இந்த கலவரத்துக்கு பொறுப்பு ஏற்று  அமித்ஷா உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
 

T.Balamurukan

டெல்லி கலவரம் தொடர்பாக அமைதி காப்பது ஏன்  என உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். இந்த கலவரத்துக்கு பொறுப்பு ஏற்று  அமித்ஷா உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

வடகிழக்கு டெல்லி ஜப்ராபாத் மற்றும் மவுஜ்பூர் பகுதியில் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். போராட்டக்காரர்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட,இச் சட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கும் அங்கே கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இருதரப்பினரும் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மவுஜ்பூர் பகுதியில்  குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. அப்போது பா.ஜனதா தலைவர் கபில் மிஸ்ரா தலைமையில் சிலர் அங்கு கூடினார்கள். அவர், போராட்டக்காரர்களை 3 நாட்களுக்குள் டெல்லியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று போலீசாரிடம் கூறினார்.

அந்த சமயத்தில் குடியுரிமை சட்ட ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசினர். இருதரப்பினரையும் போலீசார் அமைதிப்படுத்த முயன்றும் முடியவில்லை. ஜப்ராபாத் மற்றும் மவுஜ்பூர் பகுதியில் இருந்த பல வாகனங்கள், வீடுகள், கடைகள் ஆகியவற்றுக்கு சிலர் தீவைத்தனர். இந்த மோதலை தொடர்ந்து அந்த பகுதியில் இருந்த மெட்ரோ ரெயில் நிலைய வாயில்கள் மூடப்பட்டன. கடைகளும் அடைக்கப்பட்டன.வன்முறை கும்பல் கல்வீசியதில் போலீஸ் துணை கமிஷனர் அமித்சர்மாவுக்கு தலை மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டது. காயமடைந்த போலீசார் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த போலீஸ் ஏட்டு ரத்தன்லால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்நிலையில் கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை  5 ஆக உயர்ந்துள்ளது. 

 இந்த கலவரத்தைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி  வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில்.., 'டெல்லியில் நிகழ்த்தப்பட்ட கலவரம் மிகவும் கவலை அளிப்பதாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார். இது குறித்து டிவிட்டரில், கருத்து பதிவிட்ட அவர், ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு அமைதி வழி போராட்டம்  தவிர வன்முறையால் எந்த தீர்வும் கிடைக்காது என கூறியுள்ளார். வன்முறையை கைவிட்டு கலவரக்காரர்களிடமிருந்து டெல்லிவாசிகள் விலகியிருக்க வேண்டும் என ராகுல்காந்தி கேட்டுக் கொண்டுள்ளார். 

 டெல்லி கலவரம் தொடர்பாக அமைதி காப்பது ஏன்  என உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். இந்த கலவரத்துக்கு பொறுப்பு ஏற்று  அமித்ஷா உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
 

click me!