தூத்துக்குடி கலவரம் குறித்த விசாரணை, ஆணையம் முன்பு இன்று ஆஜராவாரா? நடிகர் ரஜினிகாந்த்...?

Published : Feb 25, 2020, 07:33 AM ISTUpdated : Feb 25, 2020, 10:04 AM IST
தூத்துக்குடி கலவரம் குறித்த விசாரணை, ஆணையம்  முன்பு   இன்று  ஆஜராவாரா? நடிகர் ரஜினிகாந்த்...?

சுருக்கம்

தூத்துக்குடி கலவரம் குறித்து இன்று ரஜினிகாந்த் ஆஜர் ஆவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

T.Balamurukan

 தூத்துக்குடி கலவரம் குறித்து இன்று ரஜினிகாந்த் ஆஜர் ஆவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  


 தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது தமிழக அரசு. 

 இது வரைக்கும் 18 கட்ட விசாரணை நடத்தப்பட்டு இருக்கிறது. கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள், போராட்டத்தில் பங்கேற்றவர்கள், போராட்டத்தை முன்னெடுத்த முக்கிய நிர்வாகிகள், வக்கீல்கள், பத்திரிகையாளர்கள் உள்பட 445 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. 630 ஆவணங்களும் பதிவு செய்யப்பட்டு உள்ளன.நடிகர் ரஜினிகாந்த் கடந்த 30-5-2018 அன்று தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து, துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, 'மக்கள் 100 நாட்கள் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து நடந்த போராட்டத்தில், கலெக்டர் அலுவலகம், குடியிருப்பு எரிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சாமானிய மக்கள் கிடையாது. நிச்சயமாக விஷகிருமிகள், சமூக விரோதிகள் உள்ளே நுழைந்து உள்ளனர். இந்த புனிதமான போராட்டம் கூட ரத்தக்கறையுடன் முடிந்து உள்ளது என்று குறிப்பிட்டு இருந்தார்.

 ஒருநபர் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியது. ஆனால், ரஜினிகாந்த் விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு கோரி ஆணையத்துக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.இந்த நிலையில் 19-வது கட்ட விசாரணை தூத்துக்குடி அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் விசாரணை ஆணையர் அருணாஜெகதீசன் தலைமையில் நேற்று தொடங்கியது.இன்று ரஜினிகாந்த் உள்ளிட்ட 5 பேர் விசாரணை ஆணையம் முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. இதில் ரஜினிகாந்தின் வக்கீல் ஆஜராகி அபிடவிட் தாக்கல் செய்வார் என்று கூறப்படுகிறது. 

PREV
click me!

Recommended Stories

திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு
திமுகவை நத்தி பிழைப்பதற்காக.. நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு..! குருவுக்கு எதிராக அக்னியை கக்கும் நாஞ்சில்