
போலீசாரை சமூக விரோதிகள் அடித்ததால்தான் தூத்துக்குடி கலவரத்துக்கு காரணம் என்று நடிகர் ரஜினிகாந்த் அழுத்தம் திருத்தமாக செய்தியாளர்கள் மத்தியில் கூறினார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். தற்போது அவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை, அமைச்சர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வந்தனர். இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று தூத்துக்குடிக்கு சென்றார். துப்பாக்கிசூட்டில் காயமடைந்தவர்களைச் சந்தித்து அவர் ஆறுதல் கூறினார்.
இதன் பின்னர், நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். சென்னை திரும்பிய அவர், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் ஆவேசமாக பேசினர்.
அவர் பேசியது, ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது சமூக விரோதிகள் எப்படி கெடுத்தார்களோ, அதேபோன்று தூத்துக்குடி போராட்டத்திலும் கடைசி நாளில் சமூக விரோதிகள் கெடுத்தார்கள். இந்த பிரச்சனை போலீசாரை தாக்கிய பிறகே உருவானது என்று அழுத்தம் திருத்தமாக பேசினார்.
சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கணும். உண்மையைக் வெளிக்கொணர வேண்டும்.
சமூக விரோதிகள்தான் போராட்டத்தைக் கெடுத்தது. போலீசை அடித்ததும் அவர்கள்தான். ஆட்சியர் அலுவலகத்தை அடித்ததும் அவர்கள்தான். மக்கள் போராட்டம் போராட்டம் என்று சொல்லி தமிழகத்தை சுடுகாடாக்கிடாதீங்க என்றும் கேள்வி கேட்ட செய்தியாளர்கள் மத்தியில் ரஜினிகாந்த் ஆவேசமாக பேசினார்.