
எதற்கெடுத்தாலும் இப்படி போராட்டம் நடத்தக்ககூடாது, போராடினால் இதுபோன்ற அசம்பாவிதங்கள் ஏற்படும், நீதிமன்றம் மூலமே பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என என்று தூத்துக்குடியில் ரஜினிகாந்த் பேசியுள்ளது மீண்டும் மக்கள் மத்தியில் கோபத்தை உண்டாக்கியுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிர் காவு வாங்கப்பட்டது. பலர் படுகாயங்களோடு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து அரசியல் கட்சித் தலைவர்கள் ஸ்டாலின், வைகோ, தினகரன் , கமல் உள்ளிட்டோர் நேரடியாக சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.
இந்த சம்பவம் நடந்து ஒருவாரம் ஆன நிலையில், 144 தடை உத்தரவு நீக்கப்பட்ட்ட பிறகு தனது படையோடு தூத்துக்குடிக்கு சென்றார் ஆன்மீக அரசியல் கட்சித் தலைவர் ரஜினி.
அப்போது ரஜினிகாந்த் பேசுகையில், மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது மிகவும் மோசமான செயல். அதில் பாதிக்கப்பட்டவர்கள் பலர் பிரமை பிடித்துப் போய் உள்ளனர். மக்கள் போராட்டத்தில் சில சமூக விரோதிகள் புகுந்ததே இந்தப் போராட்டத்திற்கு காரணம் . அவர்கள் அடையாளம் காணப்பட்டு தகுந்த தண்டனை வழங்கப்படவேண்டும்.
மக்கள் சக்திதான் மிகப்பெரிய சக்தி எனவே, அவர்களைப் பாதுகாக்க அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். இனிமேல் தூத்துக்குடியில் மட்டுமல்ல தமிழகத்தின் எங்குமே இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்ககூடாது எனப் பேசினார்.
மேலும் பேசிய அவர், ஏதாவது தவறு ஏற்பட்டால் மக்கள் நீதிமன்றம் சென்றே அதற்கு தீர்வு காணவேண்டும். அனைத்து பிரச்னைகளுக்கும் போராட்டம் தீர்வாகாது. எல்லாவற்றிற்கும் போராடிக்கொண்டிருந்தால், தமிழகத்தின் நிலை பாதிக்கப்படும்.
மக்கள் போராட்டங்கள் குறித்த ரஜினின் பார்வை பெரும் குழப்பமாக இருப்பதையே தூத்துக்குடி பேச்சு மக்களை கொந்தளிக்கச் செய்துள்ளது.
நீதிமன்றத்திற்கு சென்று அதற்கு தீர்வு காணவேண்டும் என பேசியிருக்கும் ரஜினி சார்... டைம் பாஸ்க்கா போராட்டம் நடத்துறோம்? எங்களுக்கு வேற வேலையே இல்லையா? என சமூக வலைதளங்களில் கொந்தளித்து கண்டனத்தை பதிவிடுகிறார்கள்.
பாஜகவுக்கு வசனம் எழுதிக் கொடுக்கர ஆளு தான் ரஜினிக்கும் தூத்துக்குடியில என்ன பேசனும் அப்படிங்கிரதை பேச நகலெடுத்து அனுப்பி இருக்கானுங்க. சந்தேகம் இருந்தா ரஜினி இன்று பேசியதையும் பாஜக மற்றும் அதன் ஆதரவு அமைப்புகள் பேசுகிற பேச்சையும் ஒப்பிட்டு பாருங்க மக்கா