
தமிழக அரசியல் விவகாரத்தில் முடிவு எடுக்கக் கூடிய அனைத்து அதிகாரமுத் வசர்னர் வித்யா சாகர் ராவ் கைகளில் உள்ளது மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் மற்றும் சசிகலா இடையே எழுந்துள்ள மோதல் தமிழகத்தையே பரபரப்புக்குள்ளாக்கி இருக்கிறது. இரு தரப்பினருமே தங்களுக்குத்தான் முழு பெரும்பான்மை உள்ளது என்றும் ஆட்சி அமைக்கும் உரிமை தங்களுக்கே தரவேண்டும் என இருவருமே ஆளுநரிடம் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
நேற்று இரு தரப்பினரும் ஆளுநரை சந்தித்த நிலையில் இப்பிரச்சனை குறித்த அறிக்கையை, ஆளுநர் வித்யா சாகர் ராவ், குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சகம் அன்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு அனுப்பி வைத்தார்.
இதைத் தொடர்ந்து ஆளுநர் பல்வேறு சட்ட நிபுனர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் வெகு விரைவில் அவர் முடிவு எடுப்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக அமைச்சர் ராஜ்நாத்சிங் அளித்த பேட்டியின்போது, கவர்னர் அறிக்கை மீது மத்திய அரசு முடிவு எடுக்க முடியாது என்றும் . இந்த விவகாரம் கவர்னரின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்றும் தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பது ஆளுநர் கைகளில்தான் உள்ளது என்றும் அவர் விரைவில் முடிபெடுப்பார் என்றும் ராஜ்நாத் சிங் செய்தியாளர்களுக்கு தெரிவித்தார்.