எம்.எல்.ஏக்கள் எங்கே?? - சசிகலாவுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

 
Published : Feb 10, 2017, 01:06 PM ISTUpdated : Sep 19, 2018, 01:05 AM IST
எம்.எல்.ஏக்கள் எங்கே?? - சசிகலாவுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

சுருக்கம்

கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ கீதாவை காணவில்லை என அவரது உறவினர் அளித்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த உயர்ந்திமன்றம் சசிகலா , டிஜிபி ஆகியோர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சசிகலா தரப்பில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூ்வத்தூர் ரிசார்ட்டில்   தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சட்டவிரோதமாக அடைதது வைக்கப்பட்டுள்ளதாக உயர்நீதி மன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. 

கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ  கீதாவை காணவில்லை என உறவினர் ப்ரீத்தா சார்பில்  தொடர்ந்த வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா பதிலளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து டிஜிபி ராஜேந்திரன், சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ் ஆகியோரும் பதிலளிக்க வேண்டும் எனவும் ஐகோர்ட்  உத்தரவு பிறப்பித்துள்ளது. வரும் திங்கள்கிழமைக்குள் 3 பேரும் பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி செல்வம் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!
அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!