ஊழலுக்கு எதிரானது பிரதமர் மோடியின் ஆட்சி…. பாஜக ராஜ்ய சபை எம்.பி. ராஜீவ் சந்திரசேகர் பெருமிதம்!!

By Selvanayagam PFirst Published Oct 24, 2018, 9:40 PM IST
Highlights

இந்தியாவின் பெரிய புலனாய்வு அமைப்பான சிபிஐயில் ஊழல் குற்றச்சாட்டு எழுந்தவுடன் உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய பிரதமர் மோடி, உயர் அதிகாரிகளை கட்டாய விடுப்பில் அனுப்பியதோடு புதிய சிபிஐ இயக்குநரையும் நியமித்து தான் ஊழலுக்கு எதிரானவர் என்பதை நிரூபித்துள்ளார் என பாஜக  எம்.பி. ராஜீவ் சந்திரசேகர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்

இந்தியாவின் மிகப் பெரிய புலனாய்வு அமைப்பான சிபிஐயின் இரு  பெரும் அதிகாரிகள் ஒருவர் மேல் ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். இது இந்திய அரசியலில் மிகப்பெரிய விவாதப் பொருளாகியுள்ளது.

இந்த ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இரண்டு அதிகாரிகள் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் புதிய இயக்குநராக நாகேஸ்வரராவ் றியமிக்கப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கையை பிரதமர் அலுவலகம் உடனடியாக எடுத்தது.

ஆனால் தனது சொந்த நலனுக்காக பிரதமர் மோடி சிபிஐ அமைப்பை பயன்படுத்துகிறார் என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. மேலும் சிபிஐ அமைப்பின் உள் விவகாரங்களில் மோடி தலையிடுவதாகவும் தெரிவித்துள்ளன.

ரஃபேல் ஒப்பந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க அலோக் வர்மா மிகுந்த ஆவலுடன் இருப்பதாகவும், அதைத் தடுக்க பிரதமர் மோடி முயற்சி செய்வதாகவும் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. ஆனால் ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற மோடியின் நடவடிக்கையில் அவர் உறுதியாக உள்ளார். அவர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்ள குறித்து அவர் கவலைப்படுவதில்லை.

இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகளை அழைத்து விசாரித்த பிரதமர் மோடி, அந்த உயர் அதிகாரிகள் இருவரையும் உடனடியாக கட்டாய விடுப்பில் அனுப்பியதோடு புதிய இயக்குநரையும் நியமித்து உத்தவிட்டுள்ளார்.

இது குறித்து தனது டுவீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாஜக எம்.பி. ராஜீவ் சந்திரசேகர், பிரதமர் எடுத்துள்ள இந்த  அதிரடி முடிவு, ஊழலுக்கு எதிரான மோடியின் சகிப்பின்மையைக் காட்டுவதாக அமைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

சிபிஐயின் உயர்மட்ட அதிகாரிகளின் ஊழலை அம்பலப்படுத்தியதால், தான் ஒரு தனித்தன்மை மிகுந்தவர் என் மோடி நிரூபித்துள்ளார் எனவும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.

சிபிஐ அதிகாரிக்ள மீது ஊழல் குற்றச்சாட்டு வந்தவுடன் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்திருப்பது அவரது நிவாகத் திறமையைக் காட்டுவதாக அமைந்துள்ளது என்றும் ராஜீவ் சந்திரசேகர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்

click me!