’அந்த விஷயத்தில்’ சிக்கிய அம்மாடியோவ் பெரிய மனுஷங்க: ராயப்பேட்டை அலுவலகத்தில் கிடைத்த ரகளை லிஸ்ட்.

By thenmozhi gFirst Published Oct 24, 2018, 6:34 PM IST
Highlights

ஆளும் அ.தி.மு.க.வை வெச்சு செய்து கொண்டிருக்கிறது அமைச்சரின் ஆடியோ மற்றும் ‘அடுத்த வாரிசு’ விவகாரம். அமைச்சரவைக்குள்ளும் இதுதான் ஹாட் டாபிக். பேப்பர்கள், வார இதழ்கள் ஆகியவற்றில் இந்த விவகாரம் தொடர்பாக வரும் செய்திகளை மேற்படி மிஸ்டர்.கொமாருக்கு தெரியாமல் தங்களுக்குள்ளேயே ஷேர் செய்து கதகதப்பாக சாட் செய்து கொண்டும் இருக்கிறார்கள். 

ஆளும் அ.தி.மு.க.வை வெச்சு செய்து கொண்டிருக்கிறது அமைச்சரின் ஆடியோ மற்றும் ‘அடுத்த வாரிசு’ விவகாரம். அமைச்சரவைக்குள்ளும் இதுதான் ஹாட் டாபிக். பேப்பர்கள், வார இதழ்கள் ஆகியவற்றில் இந்த விவகாரம் தொடர்பாக வரும் செய்திகளை மேற்படி மிஸ்டர்.கொமாருக்கு தெரியாமல் தங்களுக்குள்ளேயே ஷேர் செய்து கதகதப்பாக சாட் செய்து கொண்டும் இருக்கிறார்கள். 

அதே சூழலில், இந்த விவகாரத்தில் இருந்து எப்படி மீள்வது? என்று மிக கடுமையாக திட்டம் போட்டு காய் நகர்த்தி வருகிறது மேர்படி மாண்புமிகுவின் கூடாரம். அதேவேளையில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வந்து அமரும், சம்பந்தப்பட்ட வடசென்னை மாண்புமிகுவின் ஆதரவாள சீனியர்கள் ‘நடந்தது நடந்துடுச்சு. என்னமோ இவர் மட்டும் தான் இப்படி பண்ணிட்டாரா என்ன? நம்ம கட்சியிலேயும், அங்கிட்டும் (தி.மு.க.) இந்த மாதிரி ஏகப்பட்ட சம்பவங்கள் நடந்திருக்குது. அந்த ஆளுங்களெல்லாம் ராஜினாமா பண்ணிட்டாங்களா இல்லே அப்போ இருந்த கட்சியின் தலைமைதான் அவங்களை தூக்கி வீசிடுச்சா?  சிக்குன முக்கியஸ்தருங்க அதிகம் ஆனா தண்டிக்கப்பட்டது ரொம்ப கொஞ்சம் தான்.
 
வேணும்னா இப்படியான சிக்கலில் சிக்குன ரெண்டு கட்சி நிர்வாகிங்க லிஸ்டையும் சொல்லட்டுமா?” என்று ஆரம்பிக்கிறார்கள். 

அவர்கள் கொடுத்த லிஸ்டை கவனித்தால் ‘அம்மாடியோ இவருமா இப்படி?’ என்று தோன்றுகிறது. அந்த லிஸ்டில் உள்ள நபர்களை சாடைமாடையாக சொல்கிறோம் காதுல போட்டுக்குங்க...

*    எதிர்க்கட்சிக்காரு இவரு... கல்யாணமாகி ரெண்டு  குழந்தைங்க உண்டு. ஆனாலும் இன்னொருத்தர் மனைவி கூட  சிநேகிதமாக, அந்தம்மாவை பிரிச்சு  கூட்டியாந்து லிவிங் டுகெதர்!ல இருந்தாங்க கொஞ்ச காலம். அப்புறமா ஊர் காதுல சேதி விழுந்ததும் எந்த தயக்கமுமில்லாம புருஷன், பொண்டாட்டியா வெளிப்படையா வாழ துவங்கிட்டாங்க. அந்த மாண்புமிகு பெரிய அதிரடி வழக்குல சிக்கி சின்னாபின்னமானதுக்கு இந்த அம்மாளோட பின்புலம் தான் காரணமாம். 

*    ஆளும் அணியில தனியாவர்த்தனம் பண்ற தலைவர் இவரு. சில வருஷங்களுக்கு முன்னாடி மிடில் எலெக்‌ஷன் மூலமா உள்ளே வந்த அந்த தெக்கத்தி லேடி கூட அரசல் புரசலா நெருக்கமானாரு. அப்புறம் அதுவே கதின்னு இவர் கெடக்க, மொத்த குடும்பமும் வந்து தலைமைட்ட  பஞ்சாயத்து வெச்சாங்க. அதிரடியா போச்சு பவரு. 

*    இதே ஆளும் கட்சி சில வருடங்களுக்கு முன்னாடி ஆண்ட போது தெற்கத்தி தேசத்தின் மாண்புமிகு கண்ணன் அவரு . அரசியல்ல மின்னலாய் உச்சம் தொட்டு அப்புறம் மாயமாகி போன கப்பல்தலைவன் நடிகர் படத்துல ஏடாகூடமா பம்பரத்தை வாங்கிக்கட்டிய நடிகை கூட கன்னாபின்னான்னு காதல்ல விழுந்தாரு. அம்மா வரைக்கும் விஷயம் கசிஞ்சு அப்புறமா சரிய ஆரம்பிச்சவருதான், ம்ஹூம் இப்ப வரைக்கும் எந்திரிக்க முடியலை. 

*    எதிர்கட்சியில சார்பு அணியில மிகப்பெரிய போஸ்டிங்குல இருக்கிறாரு அவரு. போன கவர்மெண்டுல அவரு இருந்த லெவலும் வேற. அப்போ பெரிய இடத்துல சிநேகிதம் பிடிச்சு கிறங்கிட்டாரு. வூட்டம்மாவுக்கு விஷயம் போயி ‘ஏனுங் மாமோவ்! அதெல்லாம்  நெசந்தானுங்ளா? நம்ம புள்ள மொகத்த பார்த்து சொல்லுங்கோவ்’ என்று அழுது வடிந்ததை ஊரே அறியுமுங்கோ. 

*    இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியை அவிச்சு எடுத்த நபரின் அணியில் இருக்கிறார் அந்த மனிதர். ஆள்  குள்ளமென்றாலும் ஆக்டிவிட்டீஸ் எல்லாம் ரொம்பப் பெரிய ரகம். அந்த கட்சியே நடு நடுங்குற குடும்பத்துல ஒரு சிநேகிதத்தை புடிச்சாரு பாருங்க. அசந்து போயிட்டாங்க சக மாண்புமிகுங்க. அதுக்குப் பிறகு அவருக்கு கெடச்ச மரியாதையே வேற லெவல். ஆனா சரிவும் அதாலேயேதான். 

*    எதிர் முகாமை கடந்த சில தேர்தல்களா எந்திரிக்கவே முடியாத படி செய்த வழக்கின் நாயகன் இவரு. மிகப்பெரிய இடத்துல சிநேகிதத்தை வளர்த்துக்கிட்டு சர்ச்சையில சிக்கி மிக கடுமையா விமர்சனத்தை சந்திச்சாரு. ஆனாலும் அவரை ‘ஆ’ன்னு பார்த்தாங்க. ஒரு கட்டத்துல தலைமையே கூப்பிட்டு ‘குழப்பம் பண்ணாம நகர்ந்துடு. உம்மேலே நல்ல நம்பிக்கை வெச்சிருக்கேன்.’ன்னு சொன்ன பிறகுதான் நிலைமை சீராச்சு. 

........ இப்படியாக தொடர்கிறது  அந்த  லிஸ்ட்டு. 
முழுவதையும் சொன்னாக்க மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிடும்.

click me!