உங்க ஆட்சிக்கு எந்த பாதிப்பும் வராது... எடப்பாடிக்கு நம்பிக்கை தெரிவித்த ஆளுநர்!

Published : Oct 24, 2018, 04:24 PM IST
உங்க ஆட்சிக்கு எந்த பாதிப்பும் வராது... எடப்பாடிக்கு நம்பிக்கை தெரிவித்த ஆளுநர்!

சுருக்கம்

தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் தினகரன், மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தீவிரமாக ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் தினகரன், மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தீவிரமாக ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். 18 பேரையும் குற்றாலத்துக்கு அனுப்பியுள்ள தினகரன், அவர்களோடு தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறார். தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை பொறுத்து அடுத்தக்கட்ட நகர்வு குறித்து முக்கியமான ஆலோசனையில் இருக்கிறார். 

திமுகவைப் பொறுத்தவரையில் இந்தத் தீர்ப்பினை அடுத்து சட்டமன்றத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும், நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தல் கூட வரலாம் என்பதால் ஸ்டாலின் அடுத்தடுத்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மற்றும் நாடாளுமன்ற தொகுதி கழக பொறுப்பாளர்கள் கூட்டம் நாளை நடைபெறுகிறது. இதில் முக்கிய ஆலோசனை நடத்தப்பட  வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. 

முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கடந்த சில நாட்களாகவே இது தொடர்பாக பல்வேறு கட்ட ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் கடந்த 20-ம் தேதி சேலத்தில் இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அன்று சேலத்துக்கு வருகை தந்திருந்த கேரளா ஆளுநர் சதாசிவத்தை வரவேற்றார். பின்னர் இருவரும் தீவிரமாக சிறிது நேரம் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. அப்போது தகுதி நீக்க விவகாரம் தொடர்பாக பற்றி முதல்வர் கேட்க, இந்த வழக்கில் உங்கள் ஆட்சிக்கு எந்த பாதிப்பும் வராது என்று கூறியுள்ளார். அதனால கவலைப்பட வேண்டாம் என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் வருகிற நாடாளுமன்ற தேர்தலோட இந்தத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளுக்கும் தேர்தல் வரலாம். அதை எதிர்கொள்ளத் தயாரா இருங்க” என்று சதாசிவம் கூற, இதைக் கேட்டு மிகவும் உற்சாகம் அடைந்திருக்கிறாராம் முதல்வர். இதனால் முதல்வர் சற்று நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

ஊழல் திமுக கூட்டணியை வீழ்த்துவது உறுதி.. பாஜகவுக்கு எத்தனை சீட்? இபிஎஸ்-பியூஸ் கோயல் கூட்டாக பேட்டி!
அமர்பிரசாத்துடன் ஆந்திரா பக்கம் கரை ஒதுங்கிய அண்ணாமலை..! அதிமுக பேச்சு வார்த்தையில் கழட்டிவிட்ட பாஜக..!