பெயர்... வாக்காளர் அடையாள அட்டை... கட்சிக்காக ரஜினியின் கலர்ஃபுல் வெப்சைட்...

First Published Jan 2, 2018, 10:58 AM IST
Highlights
Rajinikanth started website for his party


2017 - 31 ஆம் தேதி அரசியல் அறிவிப்பு, 2018 1 ஆம் தேதி உறுப்பினர் சேர்க்கைக்காக இணையதளம், ஆப் அறிமுகம் என்று படு ஸ்பீடாக செயல்பட்டு வருகிறார் ரஜினி.

வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் எனவும் அதற்கு முன்பு ஒவ்வொரு தெருவிலும் தனது ரசிகர் மன்றம் தொடங்கப்பட வேண்டும் எனவும் ரசிகர்களிடம் குறிப்பிட்டார். 

முதல் கட்டமாக கட்சியின் இளைஞர் அணி, வழக்கறிஞர் அணி உள்ளிட்ட அணிகளை உருவாக்கும் பணிகளை மேற்கொள்ளவும் நற்பணி இயக்க நிர்வாகிகளுக்கு ரஜினி உத்தரவிட்டுள்ளார். உண்மை, உழைப்பு, உயர்வு இதுதான் தாரக மந்திரம். நல்லதே நினைப்போம். நல்லதே செய்வோம். நல்லதே நடக்கும். இதுதான் நமது கொள்கை. வரும் தேர்தலில், நம்ம படையும் இருக்கும் என்று ரஜினிகாந்த் கூறினார். 

2017 - 31 ஆம் தேதி அரசியல் அறிவிப்பு, 2018 1 ஆம் தேதி அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் என்ற டிவிட்டர் கணக்கு,. ரஜினிமன்றம் இணையதளம், செயலி அறிமுகம் என அதகளமாக இருக்கிறது ரஜினியின் அரசியல் என்ட்ரி...  இந்நிலையில், ரசிர்கள் அல்லாதவர்கள், பதிவு செய்யப்படாத ரசிகர் மன்றத்தினர் என அனைவரையும் அரசியல் மாற்றம் என்ற ஒரே இணையத்தில் இணைக்கும் முயற்சியாக www.rajinimandram.org என்ற இணையதள பக்கத்தில் பதிவு செய்யுமாறு ரஜினிகாந்த் அறிவித்தார்.

அரசியல் அறிவிப்பு வெளியிட்ட அடுத்த நாளே அதிரடியாக இணையதள பக்கம் மற்றும் செயலியை ரஜினி நேற்று அறிமுகம் செய்தார். இந்த இணையதள பக்கத்தில் தங்களின் பெயர் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன் பதிவு செய்யுமாறு ரஜினி பேசிய வீடியோவையும் வெளியிட்டிருந்தார். இதனையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் பதிவு செய்யத் தொடங்கியுள்ளனர்.

click me!