பிறக்கும்போதே லட்சாதிபதியாக பிறந்த பெண் குழந்தை….. பெங்களூரு அதிசயம் !!

 
Published : Jan 02, 2018, 10:35 AM ISTUpdated : Sep 19, 2018, 01:46 AM IST
பிறக்கும்போதே லட்சாதிபதியாக பிறந்த பெண் குழந்தை….. பெங்களூரு அதிசயம் !!

சுருக்கம்

A baby girl born in lakhs by birth Bengaluru miracle

புத்தாண்டு நள்ளிரவில் பிறந்ததன் மூலம் பிறக்கும்போதே லட்சாதிபதியாக பிறக்கும் வாய்ப்பு பெங்களூரைச் கோபி – புஷ்பா தம்பதியின் பெண் குழந்தைககு கிடைத்துள்ளது.

பெங்களூரு நகரில் 2018ம் ஆண்டு, ஜனவரி 1ந்தேதி பிறக்கும் முதல் குழந்தைக்கு பள்ளி முதல் கல்லூரி வரை கல்வி இலவசமாக அளிக்கப்படும் என பெங்களூரு மேயர் ஆர். சம்பத் ராஜ்  அறிவித்திருந்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த அறிவிப்பில் , பெண் குழந்தைகள் குடும்பத்துக்கு சுமையாக யாரும் நினைத்துவிடக் கூடாது என்பதற்காக 2018ம் ஆண்டு, ஜனவரி 1-ந்தேதி பெங்களுரு நகரில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் முதல் பெண் குழந்தைக்கு பள்ளி முதல், கல்லூரி வரை கல்வி இலவசமாக அளிக்கப்படும்.

மேலும், ‘தி புர்கத் பெங்களூரு மகாநகர பலிகா’ சார்பில் அந்த பெண் குழந்தையின் பெயரில் ரூ. 5 லட்சம் வங்கியில் டெபாசிட் செய்யப்படும். அந்த தொகையில் இருந்து கிடைக்கும் வட்டி, அந்த குழந்தையின் கல்விக்கு பயன்படுத்தப்படும். 

ஏழை குடும்பங்களைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்கள் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக சேர்ந்து, அவர்களுக்கு  பெண் குழந்தை பிறந்தால் அதை சுமையாக நினைக்க கூடாது என்பதற்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. 



இதற்காக மருத்துவமனையில் உள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் டிசம்பர் 31-ந்தேதி நள்ளிரவு கர்பிணிகளை கண்காணிப்பார்கள். 12 மணிக்கு பின் பிறக்கும் முதல் பெண் குழந்தை யார் என்பது கண்காணிக்கப்படும். 

அறுவைசிகிச்சை மூலம்  குழந்தையை எந்த நேரமும் பிறக்க வைக்கலாம், ஆனால், இயல்பான பிரசவத்தின் மூலமே பிறக்கும் குழந்தைக்கு மட்டுமே இந்த திட்டம் பொருந்தும். மாநகராட்சியில் உள்ள 32 சுகாதார மையங்கள், 26 தாய்,சேய் நல மையங்கள் கண்காணிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பெங்களூரு நகரை சேர்ந்த புஷ்பா - கோபி தம்பதியருக்கு பெங்களூரு மாநகராட்சி மருத்துவமனையில் புத்தாண்டு அன்று  நள்ளிரவில் புத்தாண்டு பிறந்த அதே நேரத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து, இன்று அந்த மருத்துவமனைக்கு சென்ற பெங்களூரு பெருநகர மேயர் சம்பத் குமார், முன்னர் வாக்களித்தபடி, பிறந்த குழந்தை மற்றும் அதன் தாயார் புஷ்பா பெயரில் 5 லட்சம் ரூபாய்க்கான காப்புறுதி பத்திரத்தை வழங்கி வாழ்த்தினார்.
 

PREV
click me!

Recommended Stories

பிரதமர் மோடி சர்ச்சுக்கு போய்ட்டாரு.. ஸ்டாலின் எப்போ இந்து கோயிலுக்கு போவாரு? தமிழிசை கேள்வி!
விஜய் வாக்குகளால் கதிகலங்கும் திமுக..! கடைசியில் கனிமொழியை நம்பி இருக்கும் மு.க.ஸ்டாலின்..!