இமயமலையில் இருந்து சென்னை திரும்பிய ரஜினி!

 
Published : Mar 20, 2018, 02:44 PM ISTUpdated : Sep 19, 2018, 02:06 AM IST
இமயமலையில் இருந்து சென்னை திரும்பிய ரஜினி!

சுருக்கம்

Rajinikanth returned to Chennai!

நடிகர் ரஜினிகாந்த், தனது 10 நாள் ஆன்மீகப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று சென்னை திரும்பினார்.

கடந்த 20 வருடங்களாக அரசியலுக்கு வருவதாக கூறி வந்த நடிகர் ரஜினிகாந்த் கடந்த வருடம் டிசம்பர் 31 ஆம் தேதி தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்தார். இதனை அடுத்து, தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி, மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமித்து வருகிறார். 

அவ்வப்போது அரசியல் குறித்து தனது கருத்துக்களையும் கூறி வருகிறார். விரைவில் அரசியல் கட்சியின் பெயரையும் கொடியையும் அறிமுகம் செய்யப்படும் என்று செய்திகள் வெளியாகி இருந்தன. வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி அன்று கட்சியின் பெயர், கொடி அறிமுக செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. 


இந்த நிலையில்தான், கடந்த 10 ஆம் தேதி அன்று ஆன்மீக பயணமாக ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்றார். ரிஷிகேஷ் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று அங்குள்ள ஆன்மீக தலங்களில் வழிபாடு நடத்தினார். அங்குள்ள ஆன்மீக குருக்களையும் சந்தித்து பேசி வந்தார்.

இந்த நிலையில் தனது ஆன்மீக பயணத்தை முடித்துக் கொண்டு நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார். தனது ஆன்மீக பயணத்தை 10 நாட்களில் முடித்துக் கொண்ட ரஜினி இன்று சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்திறங்கினார். அங்கிருந்து அவர் போயஸ் கார்டன் புறப்பட்டு

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!