ஜெயலலிதா முதலமைச்சராக ம.நடராஜன்தான் காரணம்! சந்திரலேகா

 |  First Published Mar 20, 2018, 12:57 PM IST
IAS Chandralekha pressmeet



ஜெயலலிதா முதலமைச்சராக ம.நடராஜன்தான் காரணம் என்று ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா கூறினார். 

கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பால் அவதிபட்டு வந்த சசிகலாவின் கணவர் ம.நடராஜனுக்கு கடந்த அக்டோபர் மாதம் உறுப்பு மாற்று சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரு
மாதத்திற்குப் பிறகு ம.நடராஜன் வீடு திரும்பினார்.

Tap to resize

Latest Videos

சசிகலாவின் கணவரும் புதிய பார்வை ஆசிரியருமான  ம.நடராஜன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு, மீண்டும்
உடல்நலக் குறைவால் கடந்த 16 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ம.நடராஜன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

அவரது உடல், சென்னை, பெசண்ட் நகரில்  பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.  பல்வேறு தரப்பினர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஓய்வு பெற்ற ஐ.எ.ஏஸ். அதிகாரி சந்திரலேகா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஜெயலலிதா முதலமைச்சராக ம.நடராஜன்தான் முழு காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது என்று கூறினார். 

click me!