ரஜினி போட்டியிடும் தொகுதி இதுதானா? ரசிகர்களை கிறுகிறுக்க வைக்கும்  சூப்பர் ஏரியா...

 
Published : Jan 20, 2018, 02:03 PM ISTUpdated : Sep 19, 2018, 01:51 AM IST
ரஜினி போட்டியிடும் தொகுதி இதுதானா? ரசிகர்களை கிறுகிறுக்க வைக்கும்  சூப்பர் ஏரியா...

சுருக்கம்

rajinikanth participate krishnakiri constituency

சூப்பர் ஸ்டாரின் பரம்பரை பூர்வீகம் புனே அருகிலுள்ள மாவடி கிராமம். ஆனால் ரஜினியின் அப்பாவின் அப்பா காலத்திலேயே கர்நாடகாவுக்கு வந்துவிட்டார்கள். பிறகு  தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்ட நாச்சிகுப்பம் வந்து செட்டிலாகியிருக்கிறார்கள். மஹாராஷ்டிரா, கர்நாடகா என மாறி இறுதியாக தமிழ்நாட்டில்தான் ரஜினியின் அப்பா பிறந்திருக்கிறார். ’அப்பாவின் ஊரே மகனின் சொந்த ஊர்’ எனும் கான்செப்டின் அடிப்படையில் ரஜினி பிறந்த மண் தமிழ்நாடுதான். இதைச்சொல்லியே தன்னை ‘பச்சை தமிழன்’ என்று பறை சாற்றிக் கொள்கிறார் சூப்பரு. 

இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வரும் அறிவிப்பை வெளியிட்டதும் நாச்சிக்குப்பம் கிராமம் ஏக குஷி மோடுக்கு மாறிவிட்டது. தங்களது ஊர் இருக்கும் தொகுதியான வேப்பனப்பள்ளியில்தான் ரஜினி போட்டியிட வேண்டும் என்று இப்போதே கோரிக்கை மனு எழுத துவங்கிவிட்டனர். 

ரஜினியின் பெரியம்மா மகன், அத்தையின் பேத்தி என்று பல உறவினர்கள் இந்த சுற்றுவட்டாரத்தில் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ‘ஆம்! ரஜினி எங்களின் உறவினரே’ என்று பாசமாய் உறவு கொண்டாடுகிறார்கள். 

நாச்சிக்குப்பம் கிராமத்தில் ரஜினியின் ஏற்பாட்டில் ‘ஸ்ரீராகவேந்திரா பொது நல அறக்கட்டளை’யின் மூலமாக ஒன்றரை ஏக்கர் நிலம் வாங்கி, தனது தாய்-தந்தை நினைவாக ‘ரானோஜிராவ், ராம்பாய் நினைவகம்’ எனும் கட்டிடத்தை கட்டும் முடிவை சில வருடங்களுக்கு முன் எடுத்திருக்கிறார். இப்போதைக்கு இங்கு ஒரு தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டு பொது மக்கள் தண்ணீர் எடுக்கவும், ஆடு மாடுகள் தண்ணீர் குடிக்கவும் மட்டும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இதை மேற்கோள்காட்டி பேசும் ரஜினியின் நெருங்கிய மற்றும் தூரத்து உறவினர்கள் ‘ரஜினி மிக சென்டிமெண்டான மனிதர். பழமை, பூர்வீகம், பாரம்பரியம் ஆகியவற்றை கைவிடாத மனிதர். அந்த வகையில்தான் தன் அப்பா பிறந்து வளர்ந்த நாச்சிகுப்பத்தின் மீது ஏக அணுசரனையாக இருக்கிறார். அந்த அடிப்படையில் அவர் அரசியலுக்கு வந்ததும் நிச்சயம் இந்த தொகுதியில்தான் போட்டியிடுவார், போட்டியிட வேண்டும். அப்படி நிற்கையில் அவரை ஏக போகமாக அவரது உறவினர்களான நாங்களே ஜெயிக்க வைப்போம்.” என்று குதூகழிக்கின்றனர். 

கட்சியே துவங்காத நிலையில் ரஜினி நிற்க வேண்டிய தொகுதியையே ஆளாளுக்கு முடிவு செய்துவிட்டதை எப்படி எடுத்துக் கொள்வது என்றே தெரியவில்லை. 

இந்த நேரத்தில் இன்னொன்றையும் சுட்டிக் காட்ட வேண்டும்...அதாவது சென்னை சென்று, சினிமாவில் கரையேறி, பெரும் புகழ் ஈட்டிய பிறகு ஒரு முறை கூட நாச்சிகுப்பத்துக்கு வந்ததில்லை ரஜினி!
அவ்வ்வ்வ்வ்!....

PREV
click me!

Recommended Stories

அமித்ஷா ஆர்டர்.. இபிஎஸ் வீட்டுக்கு சென்ற நயினார்.. கூடுதல் சீட், ஓபிஎஸ்ஸை சேர்க்க நெருக்கடி?
நிலவு போல தான் விஜய்..! விரைவில் மறைந்து போவார்..! திமுகவில் இணைந்த EX மேலாளர் பி.டி.செல்வகுமார் ஆவேசம்..!