ஏதாவது செஞ்சாகனும்...! குழப்பத்தில் டிடிவி...! பிய்த்து கொள்ளும் ஆதரவாளர்கள்...!

 
Published : Jan 20, 2018, 12:58 PM ISTUpdated : Sep 19, 2018, 01:51 AM IST
ஏதாவது செஞ்சாகனும்...! குழப்பத்தில் டிடிவி...! பிய்த்து கொள்ளும் ஆதரவாளர்கள்...!

சுருக்கம்

DTV supporters are protesting to start a new party

புதிய கட்சி தொடங்குவதற்கு டிடிவி ஆதரவாளர்கள் எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்து வருவதால் புது பேரவை ஒன்றை ஆரம்பிக்கலாமா வேண்டாமா என குழப்பத்தில் ஆழ்ந்துள்ளார் டிடிவி தினகரன். 

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் பல உட்கட்சி பிரச்சனை வெடித்து வருகின்றது. ஆனால் எந்த குழப்பமும் இல்லை எனவும் அனைவரும் ஒற்றுமையாகவே இருக்கிறோம் எனவும் முதல்வரும், துணை முதல்வரும் தெரிவித்து வருகின்றனர். 

இதனிடையே சிலீப்பர் செல் அதிமுகவில் இருப்பதாகவும் அவர்கள் தேவைப்படும்போது வெளியே வருவார்கள் எனவும் டிடிவி பகீர் கிளப்பி வருகின்றார். 

அதிமுகவில் முக்கிய பதவியில் இருந்த டிடிவியே வெளியில் அனுப்பப்பட்டார். முன்னதாக சசிகலாவை எதிர்த்து அதிமுகவில் இருந்து பிரிந்த ஒபிஎஸ் நாங்களே உண்மையான அதிமுக என கூக்குரலிட்டார். 

ஆனால் சசிகலா முதலமைச்சராகாத வண்ணம் மேலிடம் விளையாடியது. இதையடுத்து சசிகலா பரிந்துரையால் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சரானார். ஆனால் ஒபிஎஸ் ஆல் எடப்பாடி ஆட்சி ஆட்டம் கொண்டே இருந்தது. 

அதற்கு ஏற்றவாறு டிடிவியும் பதவி மோகத்தில் இழந்த அரசியல் வாழ்க்கையை நிலை நிறுத்தி கொள்ள அதிரடி நடவடிக்கையில் இறங்கினார். இதில் எடப்பாடிக்கும் டிடிவிக்கும் மனக்கசப்பு வந்ததாக தெரிகிறது. 

இதனால் ராஜ தந்திரத்தை கையாண்ட எடப்பாடி மக்கள் ஆதரவு உள்ள ஒபிஎஸ்சை சேர்த்து கொண்டு டிடிவியையும் அவரது குடும்பத்தையும் கழட்டிவிட்டார். 

இதனால் கோபமுற்ற டிடிவி சுயேட்சையாக ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட்டு ஆளுங்கட்சி வேட்பாளரை தோற்கவும் அடித்தார். 

இதனிடையே சசிகலா ஆதரவால் பலன் பெற்ற 20 எம்.எல்.ஏக்கள் டிடிவி பக்கம் இருந்தாலும் அவர் தனிக்கட்சி தொடங்கினால் ஆதரவு தரமாட்டோம் என கூறி வருகின்றனர். 

மேலும் சிலர் கட்சி ஆரம்பித்தாலும் ஆதரவு தெரிவிப்போம் எனகூறி வருகின்றனர். இதனால் தனிக்கட்சி தொடங்கலாம் என நினைத்திருந்த டிடிவி தினகரன் தற்போது அந்த பிளானை கைவிட்டுள்ளார். 

இதைதொடர்ந்து டிடிவி குடும்பத்தார் பலரும் அரசியலுக்குள் வர நினைத்து பல விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர். இதற்காக டிடிவி அதிமுகவை கைப்பற்றுவது அப்புறம் இப்போதைக்கு ஒரு புது பேரவை ஒன்று ஆரம்பிக்கலாமா என யோசித்து வருகின்றாராம். 

PREV
click me!

Recommended Stories

ஓ.பி.எஸ் அப்செட்..! அமித் ஷா- விஜய்க்கு லாக்..! புதுக்கணக்கு போடும் இபிஎஸ்..!
எடப்பாடி பழனிசாமியுடன் பேசியது இதுதான்.. உண்மையை உடைத்த நயினார் நாகேந்திரன்!