
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டிய சூழ்நிலையை மற்றவர்கள் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறார்கள் என ஆடிட்டர் குருமூர்த்தி அதிரடியாக தெரிவித்துள்ளார்,
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா ? இல்லையா ? என்ற கேள்வி எல்லோர் மனதிலும் இருக்கிறது. அண்மையில் தனது ரசிகர்களை சந்தித்தார். அப்போது பேசிய ரஜினி, தமிழகத்தில் தற்போது சிஸ்டம் சரியில்லை என அதிரடியாக கருத்து தெரிவித்தார்.
மேலும் போர் வரும்போது களத்தில் இறங்கலாம் என தேர்தல் வரட்டும் பார்க்கலாம், என்பதை மறைமுகமாக தான் அரசியலுக்கு வருவதை சுட்டிக்காட்டினார்.
அதே நேரத்தில் பாஜக எம்பி சுப்ரமணியன் சுவாமி, ரஜினி அரசியலுக்கு தகுதியற்றவர், மோசடி பேர்வழி என மிகக்ககடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி, நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டிய கட்டாய சூழ்நிலையை மற்றவர்கள் ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.
ஓரிடத்தில் எதிர்ப்பு இருந்தால்தான் அங்கு முன்னேற்றம் இருக்கும் என தெரிவித்த குருமூர்த்தி, அவருக்கு இன்னும் அதிகம் எதிர்ப்பு வர வேண்டும், அப்போதுதான் ரஜினி விரைவில் அரசியலுக்கு வர வாய்ப்பு உள்ளது என்றும் குருமூர்த்தி குறிப்பிட்டார்.