ஸ்டாலின் வசீகரன் இல்லை! திருமாவுக்கு சிஸ்டம் சரியில்லை... குடுமிப்பிடி சண்டையில் தி.மு.க. மற்றும் வி.சி.க...

Asianet News Tamil  
Published : Jun 24, 2017, 09:46 PM ISTUpdated : Sep 19, 2018, 12:48 AM IST
ஸ்டாலின் வசீகரன் இல்லை! திருமாவுக்கு சிஸ்டம் சரியில்லை... குடுமிப்பிடி சண்டையில் தி.மு.க. மற்றும் வி.சி.க...

சுருக்கம்

DMK Active chife fight with VCK leader Thirumavalavan regards Thiruma Support Rajinikanth

பங்காளி சண்டையால் பாடாய்ப்படும் அ.தி.மு.க.வை விட எக்ஸ்ட்ரா காரம், மசலா கலந்த ஆந்திரா பிரியாணி மாதிரி செமத்தியாய் போய்க் கொண்டிருக்கிறது ஸ்டாலின் vs திருமாவளவன் சண்டை. 

ஸ்டாலினை கடுப்பேற்றுவதற்காக திருமாவளவன் ரஜினி புகழ் பாடுவதும், திருமாவை வெறுப்பேற்றுவதற்காக தி.மு.க. இணையதள அணியினர் விடுதலை சிறுத்தைகளை கலா மாஸ்டர் ஸ்டைலில் கிழி கிழியென கிழித்தெடுப்பதுமாய் அல்லோகலப்படுகிறது சண்டை. 

இரு கட்சிகளுக்கும் இடையிலான சண்டை இவ்வளவு சிறப்பாக போய்க் கொண்டிருந்தாலும் ஸ்டாலின் இதுவரையில் நேரடியாக களமிறங்கவில்லை. அவரது அடிப்பொடிகள்தான் ஜியோ டண்டணாடன் ஆஃபரில் தினமும் 1ஜிபி கிடைப்பதால் பொழுதன்னைக்கும் இணையத்திலேயே உட்கார்ந்து திருமாவை வெச்சு செய்கிறார்கள். 

ஆனால் ஸ்டாலின் போலல்லாமல் திருமா பர்ஷனலாகவும் களமிறங்கியடிக்கிறார், வன்னியரசு மாதிரியான தன் கைப்பிள்ளைகளையும் இறக்கிவிடுகிறார். 

ஸ்டாலினை உசுப்பேற்ற திருமா திருவாய்மலர்ந்திருக்கும் சில டயலாக்குகளை பாருங்கள்...

*    பொதுவான மக்களுடையை நம்பிக்கையைப் பெறுமளவு ஸ்டாலினுக்கு இன்னும் அங்கீகாரம் கிடைத்தது போல் தெரியவில்லை.

*    ரஜினி அரசியலுக்கு வந்தால் கருணாநிதி, ஜெயலலிதா இடங்களை நிரப்பக்கூடும். 
*    வசீகரமான தலைவர் ரஜினி. 

இப்படி திருமா போட்டுப் பிளந்தது போதாதென்று அவரது கட்சியினரும் தி.மு.க.வை வகைதொகை இல்லாமல் வம்புக்கு இழுத்திருக்கின்றனர். 

இந்நிலையில் திருமா மற்றும் அவரது டீம் தொடர்ந்து ஸ்டாலினை கலாய்ப்பதால் செம்ம காண்டான தி.மு.க.வினர் பதிலுக்கு பாய தொடங்கி இருக்கிறார்கள். 

*    ரஜினியை வசீகரமான தலைவர் எனும் நிலையில் வைத்திட நினைப்பவர்கள் யாரென்றால்...பகலில் பசுமாட்டைக் கண்டுபிடிக்க முடியாமல் இரவில் எருமை மாட்டைக் கண்டுபிடிப்பேன் என்று சொல்லும் பேர்வழிகள்தான். 

*    மக்கள் நல கூட்டணி எனும் காமெடி அமைப்புக்குள் விஜயகாந்தை இழுத்து வைத்து இப்போது ரஜினியை சொல்வது போல் அன்று அவருக்கு கொம்பு சீவி விட்டு, கொம்பு சீவி விட்டு கடைசியில் போட்டியிட்ட அத்தனை தொகுதியிலும் மண்ணைக் கவ்வ வைத்தார்கள். திருமா ஒரு காமெடி பீசு. அவர் சொல்றதுக்கு சிரிக்கலாமே தவிர சீரியஸ் ஆக கூடாது. 

*    கருணாநிதி, ஜெயலலிதாவின் இடத்தை ரஜினி நிரப்புவார் என்று சொல்வது கடைந்தெடுத்த காக்காய் பிடிப்பு வேலை. 

*    தேசிய தலைவர்கள் மட்டுமே பேசிய கருணாநிதியின் வைரவிழா மேடையில் தன்னை பேச விடவில்லை என்று திருமா நினைத்து, சின்னப் பையன் போல் சண்டை போடுவது அபத்தம். இதற்காக ரஜினியை புகழ்ந்து தள்ளுவது அரசியல் அசிங்கம். வீரமணி, ஜவாஹிருல்லாஹ், என்.ஆர்.தனபாலன், பொன்.குமார் என்று பலரும்தான் பேச முடியவில்லை. அதற்காக அவர்கள் இப்படியா நடக்கிறார்கள். 

*    இத்தனை ஆண்டுகள் எங்களுடன்  கூட்டணியில் இருந்தும் திருமாவளவனுக்கு அரசியல் வரவில்லை என்றால் அவருக்கு ‘சிஸ்டம் சரியில்லை’ என்று நினைக்கிறோம். 
- என்று போட்டுப் பிளந்துள்ளார்கள். 

இதற்கு விடுதலை சிறுத்தைகள் இணையத்தில் பதிலடி கொடுக்க, அதற்கு தி.மு.க. மீண்டும் திருப்பி தாக்க...என்று போர்க்களமாகி கொண்டிருக்கிறது.  விளங்கிடும் போங்க!

PREV
click me!

Recommended Stories

தேர்தலுக்கு பின் அன்புமணி பூஜ்ஜியமாவார் - ராமதாஸ் முன்னிலையில் கொந்தளித்த அருள்
திமுக ஆட்சி மீது காங்கிரஸ் பகீர் அட்டாக்..! தவெகவில் 50 சீட்..! ராகுல் காந்தியின் தமிழக வியூகம்..!