
தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட ரஜினிகாந்தின் பாபா முத்திரை தங்களது நிறுவனத்தின் சின்னம் போல இருப்பதாகக் கூறி உரிமை கொண்டாடி வருகிறது. இது தொடர்பாக அந்த நிறுவனம் நடிகர் ரஜினிகாந்துக்கும் கடிதம் எழுதியுள்ளது.
2017 டிசம்பர் 31 ஆம் தேதி அன்று தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்த ரஜினி, தொடர்ந்து 2018 புத்தாண்டு அறிவிப்பாக, பாபா முத்திரையுடன் கூடிய ரஜினி பேரவைக்கான மொபைல் ஆப் வெளியிட்டார். ஏற்கெனவே ஆன்மிக அரசியல் என்று வேறு சொல்லிவிட்டதால், இந்த பாப முத்திரை சின்னமே கூட ரஜினியின் அரசியல் கட்சிக்கான சின்னமாகத் தேர்வு செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
அரசியல் கட்சி தொடங்க நடவடிக்கை எடுத்து வரும் ரஜினிகாந்த், 2 நடுவிரல்கள் மற்றும் கட்டை விரலை மடித்தும், ஆள்காட்டி விரல் மற்றும் சுண்டு விரலை உயர்த்தி காண்பிக்கும் அந்த முத்திரையை பயன்படுத்தி வருகிறார்.
இந்த பாபா முத்திரை, ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சியின் மேடையில் பொறிக்கப்பட்டு இருந்ததுடன், அவரது ரசிகர்களும், அந்த முத்தரையைப் பயன்படுத்தி, கொடி, அட்டைகள் போன்றவற்றை தயாரித்து விநியோகம் செய்து வருகின்றனர். மேலும் ரஜினியின் கட்சியின் சின்னம் இதுவாக பாபா முத்திரையாக இருக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மும்பையில் உள்ள நிறுவனமான வாக்ஸ்வெப், பாபா முத்திரைக்கு உரிமை கொண்டாடி வருகிறது. இது தொடர்பாக ரஜினிகாந்துக்கும், அந்த நிறுவனம் சார்பில் கடிதம் எழுதியுள்ளதாகவும் நிறுவனர் யாஷ் மிஸ்ரா கூறியுள்ளார்.
ரஜினிகாந்தின் பாபா திரைப்படம் 2002 ஆம் ஆண்டிலேயே வெளியானது. இந்த படத்தில்தான், பாபா முத்திரை அறிமுகப்படுத்தியது. ஆனால், மும்பை வாக்ஸ்வெப் நிறுவனம், கடந்த 18 மாதங்களுக்கு முன்புதான் தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.