
சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், ஆளுநர் உரையுடன் தொடர் தொடங்கியது.
சபாநாயகர் தலைமையில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் கூட்டத்தொடர் தொடங்கியது. அதன்பிறகு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தமிழில் வணக்கம் எனக்கூறி உரையை தொடங்கினார். ஆளுநர் உரையை தொடங்கியதும், மாவட்ட வாரியாக ஆளுநரின் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொருட்டு, திமுக, காங்கிரஸ் ஆகிய எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
ஆளுநருக்கு எதிராக எதிர்ப்பு குரல்களை எழுப்பினர். அவர்களை சமாதானப்படுத்தும் பொருட்டு, எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களை “உட்காருங்கள்” “உட்காருங்கள்” என ஆளுநர் தமிழில் கூறினார். விவாதத்தின் போது உங்கள் வாதத்தை முன்வையுங்கள். முதலில் நான் பேசிக்கொள்கிறேன் என ஆளுநர் கோரிக்கை விடுத்ததை அடுத்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.