
தமிழக சட்டப் போரவைக்கும் இன்று சுயேட்சை எம்எல்ஏவாக நுழையவுள்ள டி.டி.வி.தினகரன், அமைச்சர்களிடம் அதிரடியாக கேள்விகள் எழுப்பி கலங்கடிக்கவுள்ளார் என வெளியாகியுள்ள தகவலால் ஆளும் தரப்பினர் கலங்கிப் போய் இருப்பதாக தெரிகிறது.
கடந்த ஆண்ட ஒரே அணியாக இருந்த அதிமுக இன்று இரண்டு பிரிவுகளாக பிரிந்து நிற்கிறது. டி.டி.வி.தினகரனுக்கு எதிராக முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் என வரிசை கட்டி நிற்கின்றனர்.
ஜெயலலிதா மறைந்த நிலையில் ஆர்,கே,நகடா தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் ஆளுங்கட்சியை எதிர்த்து டி.டி.வி.தினகரன் சுயேட்சையாக நின்று வெற்றிபெற்றார். இது அதிமுக அரசை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
இதனிடையே இன்று இந்த ஆண்டுக்கான சட்டப் பேரவைகு கூட்டம் ஆளுநர் உரையுடன் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக டி.டி.வி.தினகரன் சட்டப் பேரவைக்கு வந்துள்ளார்.
சட்டப் பேரவையில் அவர் இன்று அதிரடி கேள்விகளால் அமைச்சர்களை திணறடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒகி புயல், போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் உள்ளிட்ட பல பிரச்சனைகளை எழுப்ப அவ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
ஏற்கனவே திமுகவும் இப்பிரச்சனைகளை எழுப்ப உள்ளதால் இவர்களுடம்ன் தினகரன் இணைந்து கொள்வாரா ? அல்லது தனி ஒருவராய் களம் காணுவாரா என்பது இன்று தெரியும்.
அப்பிரச்சனையில் தினகரனையும் ஆளும் அரசையும் மோதவிட்டு திமுக வேடிக்கை பார்க்கப் போகிறதா என்பதும் இன்னும் சற்று நேரத்தில் தெரியவரும்.