
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கலந்துகொள்ள தினகரனுடன் வந்த தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் தலைமை செயலகத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆர்.கே.நகரில் வெற்றி பெற்ற தினகரன், முதன்முறையாக சட்டசபைக்குள் செல்கிறார். அதேநேரத்தில் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாத சூழல் உருவாகியுள்ளது.
அதிமுக, திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தலைமை செயலகத்திற்கு வந்தனர். சுயேட்சை எம்.எல்.ஏவான தினகரனும் வந்தார். தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களும் தினகரனுடன் வந்திருந்தனர். ஆனால், தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
அதன்பிறகு தினகரன் மட்டும் உள்ளே சென்றார். அவரது ஆதரவு தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களும் வெளியே நிறுத்தப்பட்டனர்.