மறந்துட்டீங்களா தலைவரே... 18 ஆண்டுகளுக்கு முன்பே பெரியாருக்காக வீரமணியிடம் மன்னிப்பு கேட்ட ரஜினிகாந்த்..!

By Thiraviaraj RMFirst Published Jan 21, 2020, 1:45 PM IST
Highlights

பெரியார் குறித்து பேசியதற்கு இப்போது மன்னிப்பு கேட்க மறுத்துள்ள ரஜினிகாந்த் இதே வீரமணியிடம் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன் பெரியார் குறித்த சர்ச்சைக்கு மன்னிப்புக்கேட்டு பின் வாங்கியிருக்கிறார். 

பெரியார் குறித்து பேசியதற்கு இப்போது மன்னிப்பு கேட்க மறுத்துள்ள ரஜினிகாந்த் இதே வீரமணியிடம் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன் பெரியார் குறித்த சர்ச்சைக்கு மன்னிப்புக்கேட்டு பின் வாங்கியிருக்கிறார். 

பாபா பாடத்தில் பெரியார், இராஜாஜி இருவரையும் ஒப்பிட்டு, பாடல் வரிகள் வரும். அந்த வரிகளை நீக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கோரிக்கை வைத்தார்.

அதாவது ரஜினி தயாரிப்பில் வெளியான பாபா படத்தில் இடம்பெற்ற ராஜ்யமா இல்லை இமயமா பாடலில், திருமகன் வருகிற திருநீரை நெற்றி மீது தினம் பூசி, அதிசயம் அதிசயம் பெரியார் தான் ஆனதென்ன ராஜாஜி’என்கிற பாடல்வரிகள் இடம்பெற்றிருந்தன. இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின.  உடனே ரஜினி, கி.வீரமணியை தொடர்பு கொண்டார். மன்னிப்புக் கேட்டு, ஆடியோ கேசட்டில் தவிர்க்க முடியாது.

 

ஆனால், திரைப்படத்தில் அந்த பாடல் வரி வராமல் பார்த்துக் கொள்கிறேன் என்று கி.வீரமணியிடம் வாக்குறுதி கொடுத்தார். உடனே, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி,  தான் எழுதிய கீதையின் மறுபக்கம் என்கிற நூலை அவருக்கு அன்பளிப்பாக அளித்தார். இந்த சம்பவம் நிகழ்ந்தது 2002ல் சரியாக சொன்னால் 18 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது.

 

அப்போது பெரியார் குறித்த சர்ச்சைக்கு மன்னிப்புக் கேட்டவர்தான் இந்த ரஜினிகாந்த். இப்போது அதே பெரியார் பற்றிய பேச்சு குறித்து, ’இல்லாததை நான் பேசவில்லை. ஆதாரம் இருக்கிறது. நான் யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது’’எனத் தெரிவித்திருக்கிறார் ரஜினி. ஆம் அப்போது ரஜினி சினிமா நடிகர். இப்போது அரசியல்வாதியாகப் போகிறார் அல்லவா..? இந்த தைரியம் கூட இல்லாவிட்டால் அரசியல்களத்தில் அவர் ஆண்டியாக நிற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டு விடும்.   
 

click me!