கமலின் நம்பிக்கையில் பெரிய சைஸ் பாறாங்கல்லைப் போட்டு நசுக்கியேவிட்டார் ரஜினி என்கிறார்கள். ஆம், மக்கள் மன்றம் எனும் ஒன்று இயங்கினால்தானே அதன் உறுப்பினர்களை வாக்கு வங்கியாக கருதி, தன்னை நோண்டுவார்கள்! எனவே அதுவே இல்லையென்றால் என்ன நடக்கும்? என்று எண்ணிய ரஜினி, கோடம்பாக்கத்தில் தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தின் பின்புறம் உள்ள சிறிய கட்டிடத்தில் இயங்கி வந்த மக்கள் மன்றத்துக்கு பூட்டே போட சொல்லிவிட்டார். பூட்டும் போட்டாகிவிட்டது.
இந்த நாடாளுமன்ற தேர்தலில் கட்சியும் கிடையாது, யாருக்கும் வாய்ஸும் கிடையாது! எனும் முடிவுக்கு எப்போதோ வந்துவிட்டார் ரஜினி. ஆனால் பி.ஜே.பி. தரப்பு அவரை வழக்கம்போல் வளைக்கப்பார்த்தது. போனால் போகிறதென்று ‘தண்ணீர் பிரச்னையை தீர்க்கும் நபரை ஆதரியுங்கள்.’ என்று பூடகமாக ஒரு கருத்தை சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார்.
அதை அப்படியே கவ்விக் கொண்ட பி.ஜே.பி. கூட்டணி ‘அவர் ஆதரிக்கச் சொல்வது எங்களைத்தான்’ என்று கிளப்பியது ஒரு அரசியலை. இதை ஆமோதிக்கவுமில்லை, மறுக்கவுமில்லை ரஜினி. இந்த நிலையில், ரஜினியின் நெடுங்கால நண்பரான கமல்ஹாசான், இந்த தேர்தலில் தன் கட்சிக்கு ரஜினி ஆதரவு தந்தால் சந்தோஷம் என்று வெளிப்படையாக கருத்து சொன்னார். இதற்கு ரஜினி ரியாக்ட் செய்யவே இல்லை. இந்த நிலையில், ’தேர்தல் நெருக்கத்தில் தன் மக்கள் மன்ற நிர்வாகிகளை அழைத்து கூட்டங்களைப் போட்டு என் கட்சிக்கு ஆதரவளிக்க சொல்வார் ரஜினி’ என்று தனக்கு நெருக்கமானவர்கள் வட்டாரத்தில் சொல்லிக் கொண்டிருந்தார் கமல்.
இந்த நிலையில் கமலின் நம்பிக்கையில் பெரிய சைஸ் பாறாங்கல்லைப் போட்டு நசுக்கியேவிட்டார் ரஜினி என்கிறார்கள். ஆம், மக்கள் மன்றம் எனும் ஒன்று இயங்கினால்தானே அதன் உறுப்பினர்களை வாக்கு வங்கியாக கருதி, தன்னை நோண்டுவார்கள்! எனவே அதுவே இல்லையென்றால் என்ன நடக்கும்? என்று எண்ணிய ரஜினி, கோடம்பாக்கத்தில் தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தின் பின்புறம் உள்ள சிறிய கட்டிடத்தில் இயங்கி வந்த மக்கள் மன்றத்துக்கு பூட்டே போட சொல்லிவிட்டார். பூட்டும் போட்டாகிவிட்டது.
அதிலிருந்து சாமான் செட்டுகளை மண்டபத்துக்கு பயன்படுத்த சொல்லிவிட்டாராம் ரஜினி. தேர்தல் முடிந்து, மே மாதம் ரிசல்ட் வரும் வரையில் மன்றமுமில்லை, அரசியலுமில்லை! எனும் அவரது முடிவின் வெளிப்படை சிக்னல்தான் இந்த அதிரடி! என்கிறார்கள் அவரை அறிந்தவர்கள். இந்த தகவலைக் கேள்விப்பட்ட கமல் அரண்டு, கிட்டத்தட்ட அழுதேவிட்டார்! என்கிறார்கள். டெபாசிட் கூட கிடைக்காது என்று தன் வேட்பாளர்கள் வெளிப்படையாக புலம்பும் நிலையில், ரஜினி ரசிகர்கள் கைகொடுத்தால் அதிசய வெற்றி, அல்லது கெளரவ தோல்வி என்று ஆறுதலடையலாம் என நினைத்த கமலின் எண்ணத்தில் மண்ணள்ளி இறைத்துவிட்டார் ரஜினி என்று கொதிக்கிறது மக்கள் நீதி மய்ய தரப்பு.
கமலின் வருத்தத்தை ரஜினியிடம் சுட்டிக்காட்டி, ‘ஏன் இப்படி பண்ணிட்டீங்க?’ என்று சில சினிமா வி.வி.ஐ.பி.க்கள் கேட்டபோது ‘ச்சே ச்சே! இதுக்கும் கமல்-க்கும் எந்த தொடர்புமில்ல. மன்ற நிர்வாகத்துல சில பிரச்னைகள். ரொம்ப கன்பியூஸன்ஸ் அதான்.’ என்று முடித்துக் கொண்டவர், கமலுக்கு ஆதரவு தர சொல்வேன் அல்லது மாட்டேன்! என்று எதையும் சொல்லாமல் லைனை கட் செய்தாராம். எல்லாவற்றையும் ஊற்றி மூடிய ரஜினி, தன் புதுப்பட ஷூட்டிங்குக்காக மும்பை கிளம்புகிறார். கமலோ தன் புதுக்கட்சி புதைகுழிக்குள் மூழ்குவதாக கலங்கி நிற்கிறார்.