பன்னீர் பையனுக்கு வேப்பிலை அடிக்கும் கேப்டன் கூட்டம்... தேனியில் ஆளுங்கட்சியை ஆளாளுக்கு வெச்சு செய்யும் கொடுமை..!

By Vishnu Priya  |  First Published Apr 7, 2019, 11:44 AM IST

ஜெயலலிதாவின் கண்ணெதிரே தி.மு.க.வின் வாரிசு அரசியலை வாய் வலிக்க பேசி வந்த பன்னீர்செல்வம், ஜெ., மறைவுக்குப் பிறகு தன் மகன் ரவீந்திரநாத்துக்கு பகுமானமாக சீட் வாங்கி, களமிறக்கி விட்டிருக்கிறார். துவக்கத்தில் ரவி செம்ம எளிதாய் வென்றிடுவார் என்றுதான் நினைத்தது பன்னீர் டீம். ஆனால், எதிர்கட்சியினர் தேனி தொகுதிக்கு பார்த்துப் பார்த்து வெச்ச ஆப்பு அவர்களை அல்லு தெறிக்க விட்டிருக்கிறது.


ஜெயலலிதாவின் கண்ணெதிரே தி.மு.க.வின் வாரிசு அரசியலை வாய் வலிக்க பேசி வந்த பன்னீர்செல்வம், ஜெ., மறைவுக்குப் பிறகு தன் மகன் ரவீந்திரநாத்துக்கு பகுமானமாக சீட் வாங்கி, களமிறக்கி விட்டிருக்கிறார். துவக்கத்தில் ரவி செம்ம எளிதாய் வென்றிடுவார் என்றுதான் நினைத்தது பன்னீர் டீம். ஆனால், எதிர்கட்சியினர் தேனி தொகுதிக்கு பார்த்துப் பார்த்து வெச்ச ஆப்பு அவர்களை அல்லு தெறிக்க விட்டிருக்கிறது. 

பன்னீரின் பரம வைரியாக இப்போது இருக்கும் டி.டி.வி. தினகரன், தன் வேட்பாளராக அந்த மண்ணை சேர்ந்தவரும், தமிழகம் முழுக்க அறியப்பட்டவருமான தங்கதமிழ்செல்வனை களமிறக்கினார். வாயாலேயே வடைசுடும் சாமர்த்தியசாலியான தங்கம் வந்ததால் வெடவெடத்துப் போனது ரவி டீம். காரணம், தேனி மாவட்டத்தில் ஓ.பி.எஸ்.ஸுக்கு எதிராக மிகப்பெரிய அரசியல் லாபியை உருவாக்கிக் காட்டியது தங்கம்தான். அவரது செல்வாக்கை தேனியில் மிக சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாதென்பதால் தங்கத்தை சமாளிக்கவே தனி டீம்களை களமிறக்கி, செலவை அள்ளிக் கொட்டுகிறது ரவி டீம். 

Tap to resize

Latest Videos

இந்த பிரதான எதிரியோடு பிரச்னை முடிந்ததா? என்றால் அதுதான் இல்லை. தி.மு.க. கூட்டணி சார்பாக மாஜி மத்தியமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை வேட்பாளராக்கியுள்ளனர். துவக்கத்தில் ‘எங்கேயோ இருக்குற இளங்கோவனுக்கு இங்குட்டு என்னப்பே வேலை?’ என்று சிரித்தார் பன்னீர். ஆனால் மிக மிக ஜனரஞ்சகமான அரசியல்வாதியான இளங்கோவனோ,  தொகுதிக்குள் கால் வைத்த இரண்டு மூன்று நாட்களிலேயே பட்டாசாக மேலெழுந்து வர துவங்கிவிட்டார். தி.மு.க. கூட்டணியினர் முழு மூச்சாக இளங்கோவனுக்கு தோள் கொடுப்பது கூடுதல் வெயிட். 

இந்த இரண்டு பக்க இடிகளுக்கு நடுவில் தலையெடுப்பதே ரவீந்திரநாத்துக்கு பெரிய சாதனையாக இருக்கும் நிலையில், பன்னீர் தர்மயுத்தம் நடத்திய காலத்தில் அவருக்கு எதிராக தேனி மாவட்டத்தில் இ.பி.எஸ்.ஸுக்கு ஆதரவாக ஒரு கூட்டம் உருவானது. என்னதான் அணிகள் இணைந்துவிட்டாலும் கூட மனங்கள் இணையாத நிலையில், இப்பவும் அந்த கூட்டம் பன்னீர் மகனின் வெற்றிக்கு பாடுபடவில்லை என்பதும் உண்மை. நல்ல கவனிப்பு ரீதியில் அவர்களை கன்வின்ஸ் செய்ய ரவி தரப்பு தலைகீழாய் நின்று பார்க்கிறது. ஆனால் காசு தான் கரைகிறதே தவிர அவர்களின் மனம் கரையவில்ல. 

காரணம்? தர்மயுத்தம் நடத்தி, கட்சிக்கு துரோகம் செய்த பன்னீர் மீண்டும் உள்ளே வந்து துணைமுதல்வர், கழக ஒருங்கிணைப்பாளர் என்று பதவிகள் பெற்றுவிட்டது மட்டுமில்லாமல், மகனுக்கு சீட் வாங்கி கொடுத்துவிட்டார், இதுபோக பன்னீரின் கையிலிருக்கும் வீட்டுவசதி வாரியத்துறை மூலமாக ஏகத்துக்கும் சம்பாதித்துக் கொழிக்கிறாரார்! என இவர்களுக்கு செம்ம கோபம். அதுவும் இந்த ஒத்துழையாமைக்கு காரணம். இப்படி திரும்பிய திசையெல்லாம் பன்னீர்செல்வத்தின் மகன் ரவிக்கு படுபாதாளங்களே கண்ணில் தெரிந்து கொண்டிருந்த நிலையில் இப்போது லேட்டஸ்டாக கேப்டன் டீமும் காலை வாரிக் கொண்டிருப்பதுதான் ஹாட்.  

அதாவது தேனி தொகுதியில் இருக்கும் ஒரு பெரிய வாக்கு வங்கி நாயுடு சமுதாயம். இளங்கோவனும், விஜயகாந்தும் இதே சமூகத்தை சேர்ந்தவர்களே. இளங்கோவன் தரப்பு தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி வாக்குகளை வளைப்பது மட்டுமில்லாமல், இ.பி.எஸ். அணியின் அதிருப்தி வாக்குகளுக்கும் அடிபோடுவதோடு, இப்போது சாதி ரீதியாக விஜயகாந்தின் வாக்கு வங்கியையும் வளைக்கிறதாம். இ.பி.எஸ். டீம் இளங்கோவனின் முயற்சிக்கு கைகொடுக்கவில்லை. ஆனால் கேப்டன் டீம் தரப்பிலிருந்து நல்ல ரெஸ்பான்ஸாம். 

இளங்கோவன் தங்கியிருக்கும் இடத்துக்கு இரவு வேளைகளில் ரகசியமாய் வந்து தங்களின் முழு ஆதரவை தெரிவித்துவிட்டு செல்கிறார்களாம் அந்த கோஷ்டியினர். இது பன்னீர்செல்வத்தின் கவனத்துக்கு தெரியவர, கண்கள் சிவந்து போனவர் நேரடியாக பிரேமலதாவுக்கு இதைச் சொல்லி கோபப்பட்டிருக்கிறார். பிரேமா, தன் நிர்வாகிகளை விசாரிக்க ’லேதம்மா’ என்று மறுத்துவிட்டார்களாம் அந்த சமுதாயத்தின் பெரிய தலக்கட்டுக்காரர்களும், தே.மு.தி.க.வை சேர்ந்த அச்சமுதாய முக்கிய புள்ளிகளும்.

ஆனால் உண்மையில் கேப்டன் டீம் சமுதாய ரீதியில் இளங்கோவனைத்தான் ஆதரிக்கும் முடிவில் இருக்கிறது என்பதை தெளிவாக புரிந்து வைத்திருக்கும் பன்னீர், இதை எப்படி உடைப்பது என்று வழி புரியாமல் தவிக்கிறாராம்! இப்படி தன்னை அத்தனை திசைகளிலும் ஆளாளுக்கு வெச்சு செய்வதால் ஆடிப்போய் கிடக்கிறார் அ.தி.மு.க. வேட்பாளரான ரவீந்திரநாத்.

click me!