பிரதமர் மோடியுடன் ரஜினி திடீர் சந்திப்பு... நாளை பிரதமர் இல்லத்தில் நடப்பதால் பரபரப்பு...

Published : May 30, 2019, 07:19 PM IST
பிரதமர் மோடியுடன் ரஜினி திடீர் சந்திப்பு...  நாளை பிரதமர்  இல்லத்தில் நடப்பதால் பரபரப்பு...

சுருக்கம்

இன்று தற்போது நடந்து வரும் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் தனது மனைவி லதாவுடன் கலந்துகொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நிகழ்ச்சி முடிந்த பிறகு இன்று இரவு டெல்லியில் தங்குவதாகவும் நாளை அவருக்குப் பிரதமர் இல்லத்தில் சிறப்பு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் நடமாடுகின்றன.

பிரதமரின் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு சுமார் 30 நிமிடங்கள் முன்னதாக தனது மனைவி லதாவுடன் வந்த ரஜினிக்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. தனது இருக்கைக்கு வந்துகொண்டிருந்த வழியில் சந்தித்த அத்தனை வி.ஐ.பி.க்களுமே ரஜினிக்கு ஒரு எக்ஸ்ட்ரா முக்கியத்துவம் கொடுத்து வணக்கம் வைத்தனர்.

இந்நிலையில் நாளை மும்பை தர்பார் படப்பிடிப்புக்குக் கிளம்புவதாக ரஜினிக்கு பிரதமர் மோடி தனது இல்லத்தில் சிறப்பு விருந்து ஒன்று ஏற்பாடு செய்திருப்பதாகவும் அவ்விருந்தில் கலந்துகொள்ளும் ரஜ்னியை தனிமையில் சந்தித்து மோடி உரையாட உள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்புக்குப் பின்னர் பா.ஜ.க.வின் பி.டீமாக இயங்குவது ரஜினியா, கமலா என்ற குழப்பத்துக்கு ஒரு தெளிவான முடிவு கிடைக்கலாம்.

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!