17 வது பிரதமராக பதவியேற்றார் மோடி... மத்திய அமைச்சர்களும் பொறுப்பேற்பு..!

Published : May 30, 2019, 07:08 PM IST
17 வது பிரதமராக பதவியேற்றார் மோடி... மத்திய அமைச்சர்களும் பொறுப்பேற்பு..!

சுருக்கம்

இந்தியாவின் 17வது பிரதமாரக குடியரசு தலைவர் மாளிகையில் நடந்த விழாவில் பதவியேற்றார் மோடி. அவருடன் மத்திய அமைச்சர்களுக்கும் பதவி பிரமானம் செய்து வைத்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

இந்தியாவின் 17வது பிரதமாரக குடியரசு தலைவர் மாளிகையில் நடந்த விழாவில் பதவியேற்றார் மோடி. அவருடன் மத்திய அமைச்சர்களுக்கும் பதவி பிரமானம் செய்து வைத்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்.

நாட்டின் 17வது பிரதமராக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பொறுப்பேற்பார் என நாடே எதிர்பார்த்தது. காரணம் ஜிஎஸ்டிக்கு கிளம்பிய கடும் எதிர்ப்பு, பண மதிப்பிழப்பால் ஏற்பட்ட அதிருப்தி, மோடியின் ஆடம்பரம், ஒரு சார்பு நிலை எடுத்ததாக நம்பிய சிறுபான்மை மக்களின் வெறுப்பு, தமிழகத்தில் நீட் எதிப்பு என மோடிக்கு பலமான எதிர்ப்பு கிளம்பியது. இன்னும் சொல்லப்போனால் பாஜகவுக்கு உள்ளே மோடிக்கு எதிராக உள்ளடி வேலைகள் நடந்தன. 

அவற்றையெல்லால் ஒற்றை ஆளான அமித்ஷாவை வைத்துக் கொண்டு லெப்டில் தட்டிவிட்டார் மோடி. அமித்ஷாவை மட்டுமே கையில் வைத்துக் கொண்டு பேயாட்டம் ஆடி, சிங்கமாய் களமிறங்கி காங்கிரஸ் கட்சி எதிர்பார்ப்பில் ரெண்டரை டன் வெயிட்டை தூக்கிப்போட்டு தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிக் கொடி நாட்டினார் மோடி. கடந்த முறை வெற்றிபெற்றதை விட அதிக தொகுதிகளில் அதாவது 354 தொகுதிகளை பாஜக கூட்டணி கைப்பற்றியது. 

இந்நிலையில், குடியரசு தலைவர் மாளிகையில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட மேடையில், விஐபிகள் புடைசூழ பிரதமர் மோடி பதவியேறுக்கொண்டார். அவருடன் 60 மத்திய அமைச்சர்களுக்கும் பதவி பிரமானம் செய்து வைத்தார் ராம்நாத் கோவிந்த். இந்த விழாவில் தொழிலதிபர்கள் அம்பானி, சதுகுரு ஜக்கிவாசுதேவ், நடிகர் ரஜினிகாந்த், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தியா, வெளிநாடு உட்ப்ட 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விஐபிகள் இந்த விழாவில் கலந்து கொண்டனர். 

 

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!