நான் நாச்சிக்குப்பம் கிருஷ்ணகிரி மாவட்டம்... சீமானை ஓங்கி அடித்த ரஜினி..!

By Thiraviaraj RMFirst Published Jan 10, 2020, 11:13 AM IST
Highlights

கடந்த ஐம்பது ஆண்டுகளாக கர்நாடக மாநில எல்லையில் உள்ள நாச்சிக்குப்பத்திற்கு ரஜினி குடும்பம் வந்து செல்கிறது. இந்த கிராமத்தில், ரஜினியின் உறவினா்கள் 50-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். 

தர்பார் படத்தில் ஒரு சீன். ரஜினி டெல்லியில் இருந்து மும்பை கமிஷனராக மாறுதலாகி விமான நிலையத்தில் இருந்து இறங்கி வருவார் ரஜினி. அவரை வரவேற்க காவல்துறை அதிகாரிகள் அங்கு வருவார்கள். அப்போதைய அறிமுகத்தின் போது காவல்துறை அதிகாரிகள் நாங்கள் ரெண்டு பேருமே தமிழ் தான் சார். நான் கள்ளக்குறிச்சி (ஏ.ஆர்.முருகதாஸின் சொந்த ஊர் )என அறிமுகம் செய்து கொள்வார்.

 மற்றொருவர் தனக்கு சொந்த ஊர் சென்னை என கூறுவார். அப்போது ரஜினி, ’’நான் நாச்சிக்குப்பம் கிருஷ்ணகிரி டிஸ்ட்ரிக்’’ எனக்கூறுவார். இந்த டயலாக்கை வெறுமனே கடந்து விட்டுப்போக முடியாது. ரஜினியின் சொந்த ஊர் இந்த நாச்சிக்குப்பம். ரஜினிகாந்த் கர்நாடகத்தில் பிறந்தாலும் அவரது தந்தையின் சொந்த ஊர் இந்த நாச்சிக்குப்பம். அவரது அப்பா ராமோசி ராவ் கெய்க்வாட் நாச்சிக்குப்பத்தில் இருந்து கர்நாடாகா மாநிலத்தில் குடியேறினார். 

ஆனாலும் கடந்த ஐம்பது ஆண்டுகளாக கர்நாடக மாநில எல்லையில் உள்ள நாச்சிக்குப்பத்திற்கு ரஜினி குடும்பம் வந்து செல்கிறது. இந்த கிராமத்தில், ரஜினியின் உறவினா்கள் 50-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். ரஜினி சிறுவனாக இருக்கும் போது நாச்சிக்குப்பத்தில் உள்ள சொந்தக்காரர்கள் வீடுகளுக்கும் அவ்வப்போது வந்து தங்கிச் செல்வதை வாடிக்கையாகவும் வைத்திருந்துள்ளார்.

 

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட பலரும் ரஜினி வேறு மாநிலத்தை சேர்ந்தவர். தமிழகத்தை தமிழன் தான் ஆளவேண்டும் என ரஜினி அரசியலுக்கு வரும் நிலையில் கடுமையாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் அவர்களுக்கு பதிலடி கொடுப்பதை போல தர்பார் படத்தில் ரஜினி இந்த வசனத்தை பேசி, தானும் தமிழன் தான் என்பதை உணர்த்தும் வகையில் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. 

இதுவரை ரஜினி தனது படங்களில் சொந்த ஊரைப்பற்றி பேசியது இல்லை. அவர் அரசியலுக்கு அச்சாரம் போட்டு வரும் நிலையில் இந்த டயலாக் முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

click me!