ஸ்டாலின் ஆளுமைமிக்க தலைவர் இல்லை..! ரஜினி பேட்டியின் அதிரடி உள்குத்து!

By Selva KathirFirst Published Nov 9, 2019, 4:08 PM IST
Highlights

காவி, திருவள்ளுவர் என்று பேசிவிட்டு வீட்டுக்குள் சென்ற ரஜினி திரும்ப வந்து அளித்த பேட்டியின் பினிசிங் தான் தற்போது திமுகவினரை டென்சன் ஆக்கியுள்ளது.

போயஸ் கார்டன் வீட்டுக்குள் இருந்து வந்த ரஜினியிடம் அரசியல் ரீதியிலான பதில்களை பெற்றுவிட செய்தியாளர்கள் எவ்வளவோ முயன்றனர். ஆனால் ரஜினி எந்த கேள்விக்கும் பிடிகொடுக்கவில்லை. மிகவும் கவனமாகவே பதில் அளித்துக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்திரல் ரஜினியிடம், ஏற்கனவே தமிழகத்தில் தலைவர்களுக்கு வெற்றிடம் இருப்பதாக கூறியிருந்தீர்கள், தற்போதும் அப்படி நினைக்கிறீர்களா என ஒரு செய்தியாளர் கேட்டார்.

இந்த கேள்விக்கு ரஜினி நோ கமென்ட்ஸ் என்று பதில் அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால் நாடாளுமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றதால் ஸ்டாலின் தலைவராக உயர்ந்து நின்றார். அதே போல் இடைத்தேர்தல் வெற்றி ஓபிஎஸ் – ஈபிஎஸ்சை தலைவர்களாக உயர்த்தியிருந்தது. ஆனால் செய்தியாளரின் கேள்விக்கு சற்றும் யோசிக்காமல், ஆமாங்க தமிழகத்தில் தற்போது ஆளுமை மிக்க தலைவர்களுக்கு வெற்றிடம் இருப்பதாக கூறி மிரள வைத்தார்.

வழக்கம் போல் ரஜினியின் இந்த பேட்டி திமுக –அதிமுக இரண்டையும் குறி வைத்தே இருந்தது. ஆனால் அதிமுகவினர் அமைதியாக இருக்க திமுகவினர் வழக்கம் போல் ருத்ரதாண்டவம் ஆட ஆரம்பித்தனர். அரசியலுக்கு ரஜினி வந்த பிறகு யார் ஆளுமை மிக்க தலைவர் என்பது தெரியவரும் என்று ட்விட்டரில் அவர்கள் சண்டையை ஆரம்பிக்க, ரஜினி ரசிகர்கள் வயிறு எரிகிறதா எரியட்டும் என்று சிரித்துக் கொண்டிருந்தனர்.

அதே சமயத்தில் அதிமுக தரப்பிலும் ரஜினிக்கு பதிலடி கொடுக்கப்பட்டது. அதிமுகவில் தலைமைக்கு பற்றாக்குறை இல்லை என்று தங்கமணி உடனடியாக பேட்டி கொடுத்தார். ஆனால் ரஜினியின் பேட்டி அதிமுகவை விட திமுகவை தான் அப்செட் ஆக்கியுள்ளது. ஏனென்றால் ஸ்டாலினைத்தான் ரஜினி அப்படி கூறியுள்ளார் என்று ரஜினி ரசிகர்களே கம்பு சுத்தி வருகிறார்கள். இதனால் ரஜினி ரசிகர்களுடன் திமுகவினர் வார்த்தை யுத்தத்தை தொடங்கியுள்ளனர்.

click me!