காவிரி பிரச்னையில் தனது நிலையை நடிகர் ரஜினிகாந்த் விளக்க வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். கர்நாடகாவை சேர்ந்த நடிகர் ரஜினிக்கு காவிரி விவகாரத்தில் நிலைப்பாடு என்ன என பலரும் கேள்விகளை எழுப்புகின்றனர். சமீபத்தில் காவிரி பிரச்சனை வந்தபோது நடிகர் ரஜினி எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் மௌனமாக இருந்தது விமர்சிக்கப்பட்டது. தற்போது அரசியலில் இறங்கியுள்ள ரஜினிக்கு காவிரி விவகாரத்தில் என்ன நிலைப்பாடு என கேள்வி எழுந்துள்ளது.இந்நிலையில் பேருந்துக்கட்டண உயர்வுக்கு எதிராக சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் காவிரி பிரச்னையில் தனது நிலையை நடிகர் ரஜினிகாந்த் விளக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று கூறிவிட்டு அமெரிக்கா சென்றவர் ரஜினி எனவும் ரஜினி ஆட்டுத் தலை போன்று கையைக் காட்டுவதாகவும் அது பாபா முத்திரையே அல்ல என்றும் சரத்குமார் தெரிவித்தார்.