ரஜினி என்ன ஸ்கூல் கொயந்தயா? டூய்...ன்னு சொன்னதும் மெரள்றதுக்கு!: விளாசி எடுக்கும் வானதி சீனிவாசன்

By Ezhilarasan BabuFirst Published Nov 5, 2019, 6:24 PM IST
Highlights

ரஜினி என்ன  ஸ்கூல் கொழந்தையா? மிரட்டுறதுக்கு! அவரு எவ்வளவு பெரிய விஷய ஞானம் உள்ள மனுஷன். அவரு ஏற்கனவே தன் இலக்கு என்ன, தான் எப்போது அரசியலுக்கு வருவேன்! அப்படின்னெல்லாம் வெளிப்படையா சொல்லிட்டார். 

தமிழக பா.ஜ.க.வில் இன்று கருத்து அடர்த்தி! ஜனரஞ்சக தன்மை! ஈர்க்கும் சக்தி! ஆகியவற்றை கொண்டிருக்கும் ஒரே நிர்வாகி என்றால் அது வானதி ஸ்ரீனிவாசன் தான். பா.ஜ.க.வின் கழுத்தில் கத்தி வைக்கும் கேள்வியானாலும் சரி, பா.ஜ.க.வின் கத்தியால் வெட்டுப்பட்ட கேள்வியானாலும் சரி கொஞ்சம் கூட தன் இயக்கத்தை விட்டே கொடுக்காமல் ச்சும்மா அந்தர் பண்ணிவிடும் கை இவர். ஒரு பிரபல வாரமிருமுறை அரசியல் இதழுக்கு பேட்டி கொடுத்திருக்கும் அவர், ரஜினி பற்றிய கேள்விகளுக்கு வெளுப்பான பதிலை தந்திருக்கிறார்.

அதில்,  இம்மாம் பெரிய பா.ஜ.க. ஏன் ஒரு நடிகரை நம்பி அரசியல் பண்றீங்க? என்று கேட்டதற்கு “நல்லா கவனிங்க, எங்கள் இயக்கத்துல எத்தனையோ நடிகர்கள் இருக்கிறாங்க. ஆனா அவங்களையெல்லாம் பத்தி பேசாமல், ஏன் ரஜினியை பத்தி மட்டுமே மீடியாவும் பத்திரிக்கைகளும் பேசுது? அவருக்குன்னு ஒரு செல்வாக்கு இருக்குது. இன்னும் அரசியலுக்கே வராத ரஜினியை சர்வ காலமும் அரசியலோடு சம்பந்தப்படுத்தி ஏன் எழுதுறாங்க? ஏன்னா அவருக்குன்னு ஒரு மக்கள் ஈர்ப்பு இருக்குது. 

இதையெல்லாம் தாண்டி இறை நம்பிக்கை, தேச ஒற்றுமை ஆகிய புள்ளிகளில் எங்கள் இயக்கத்தின் சித்தாந்தங்களோடு இணைகிறார் ரஜினி. அதனால் அவரை நாங்க வரவேற்கிறோம். இதுல என்னங்க தப்பு? அவரை அரசியலுக்கு வரச்சொல்லி நாங்க கொடுக்கிற அழுத்தத்தாலதான் அவர் அடுத்தடுத்து புதுப்படங்களை கமிட் பண்ணிட்டு எஸ்கேப் ஆகுறார்! ன்னு சிலர் வதந்தி பேசுறாங்க. நாங்க கேக்குறோம்...ரஜினி என்ன  ஸ்கூல் கொழந்தையா? மிரட்டுறதுக்கு! அவரு எவ்வளவு பெரிய விஷய ஞானம் உள்ள மனுஷன். அவரு ஏற்கனவே தன் இலக்கு என்ன, தான் எப்போது அரசியலுக்கு வருவேன்! அப்படின்னெல்லாம் வெளிப்படையா சொல்லிட்டார். 

ஒண்ணு புரிஞ்சுக்கோங்க, ரஜினி அரசியலுக்கு வரலாம், அல்லது அரசியலுக்கு வராமலே கூட போகலாம். அதெல்லாம் எங்களுகு தெரியாது. ஆனால் எந்த காலத்திலும் நாங்கள் அவருக்கு அழுத்தம் கொடுத்ததுமில்லை, கொடுக்கவும் மாட்டோம்.” என்றிருக்கிறார். 
நம்புங்க பாஸ்! அவங்க அப்படி இல்லையாம்!
 

click me!