லம்போஹினி காரில் வலம் வந்த ரஜினி... சமூக ஊடங்களில் ஹிட் அடித்த ரஜினியின் புகைப்படம்!!

Published : Jul 21, 2020, 08:33 AM IST
லம்போஹினி காரில் வலம் வந்த ரஜினி... சமூக ஊடங்களில் ஹிட் அடித்த ரஜினியின் புகைப்படம்!!

சுருக்கம்

சென்னையில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர் ரஜினி கார் ஓட்டிச் செல்லும் புகைப்படம் சமூக ஊடங்களில் வைரலாகி உள்ளது.

தன்னுடைய அரசியல் பிரவேசம் பற்றி கடந்த மார்ச் 13 அன்று மூன்று திட்டங்களை முன் வைத்து பத்திரிகையாளர்களை ரஜினி சந்தித்தார். அதன்பின் ஊரடங்கு அறிக்கப்பட்டது. சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில் ரஜினி என்ன செய்யப்போகிறார் என்ற கவலையில் அவருடைய ரசிகர்கள் உள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக ‘அண்ணாத்த’ சினிமா படப்பிடிப்பில் பங்கேற்காமல் இருந்துவரும் ரஜினி, கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் குடும்பத்தினருடன் ஓய்வெடுத்து வருகிறார்.


இந்நிலையில் ரஜினிகாந்த் லம்போஹினி காரில் அமர்ந்து, தானே அதை ஓட்டிச் செல்வது போன்ற ஒரு புகைப்படம் ஒன்று இணையத்தில் வரைலாகி உள்ளது. இந்தப் புகைப்படத்தில் மாஸ்க் அணிந்தபடி காரை ஓட்டுகிறார் ரஜினி. இதனையடுத்து  #LionInLamborghini என்ற ஹாஷ்டேக்கை அவருடைய ரசிகர்கள் ட்விட்டரில் டிரெண்ட் செய்துள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

விஜய் கூட்டணிக்கு வராவிட்டால்..? அமித் ஷாவின் ஹிடன் அஜெண்டா..! திமுகவுக்கு பொறி வைக்கும் ஃபைல்ஸ்..!
பாமக பிரச்சனைக்கு திமுக தான் காரணம்.. ராமதாஸை சுற்றி தீய சக்திகள்.. ஒரே போடாக போட்ட அன்புமணி!