பெரிய பணக்காரர்கள் வங்கியில் கொள்ளை.!! விசாரணை நடத்துமா? மத்திய அரசு.! கேள்வி எழுப்பும் ராகுல்காந்தி.!

By T BalamurukanFirst Published Jul 20, 2020, 11:03 PM IST
Highlights

வங்கிகளில் 425 நிறுவனங்கள்  கடன்பெற்றுத் திரும்பிச் செலுத்தாமல் ரூ.1.47 லட்சம் கோடி கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாகவும்  அதுகுறித்து விசாரணை நடத்துமாறு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

வங்கிகளில் 425 நிறுவனங்கள்  கடன்பெற்றுத் திரும்பிச் செலுத்தாமல் ரூ.1.47 லட்சம் கோடி கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாகவும்  அதுகுறித்து விசாரணை நடத்துமாறு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

அனைத்து இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பு சில நாட்களுக்கு முன்பு  அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில்,  "நம் நாட்டில் உள்ள 2426 நிறுவனங்கள் அரசு வங்கிகளில் கடன் பெற்று சுமார் ரூ.1.47 லட்சம் கோடியை திரும்பிச் செலுத்தாமல் உள்ளதாக தெரிவித்துள்ளன.இதில் 147 நிறுவனங்கள் ரூ 200 கோடிக்கு மேல் கடன் பெற்றுத் திருப்பிச் செலுத்தாமல் உள்ளதாகவும் இதன் மதிப்பு ரூ.67,609 கோடி என்று கூறப்பட்டுள்ளது. இதில் பல நிறுவனங்கள் பெற்றுள்ள கடன் பஞ்சாப் நேசனல் வங்கியாகும்.இதேபோல் 17 அரசு வங்கிகளில்  சுமார் 1.47 லட்சம் கோடிக்கு மேல் கடன் பெற்று நிறுவனங்கள் வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாமல் இருக்கின்றன.

இதுகுறித்து எம்.பி  ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், "2246 நிறுவனங்கள் அரசு வங்கிகளில் மக்கள் சேமிப்பில் இருந்து 1.47 லட்சம் கோடியை கொள்ளையடித்துள்ளன. இந்த மோசடி செய்தவர்களைக் கண்டுபிடித்து விசாரணை நடத்துமா அரசு ? என கேள்வி எழுப்பியுள்ளார்.

click me!