ரஜினி வீடு முற்றுகை..! ஆயத்தமாகும் திராவிட இயக்கங்கள்..! தூண்டிவிடுவது யார்..?

By Selva KathirFirst Published Jan 21, 2020, 10:37 AM IST
Highlights

கடந்த வாரம் செவ்வாய் கிழமை சென்னையில் நடைபெற்ற விழாவில் பேசிய ரஜினி, 1971ம் ஆண்டு சேலத்தில் நடந்த திக ஊர்வலத்தில் இந்து தெய்வங்களை நிர்வாணமாக எடுத்து வந்து செருப்பால் அடித்ததாக கூறியிருந்தார். இந்த பேரணிக்கு தந்தை பெரியால் தலைமை தாங்கியதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். ஆனால் அப்படி ஒரு நிகழ்வு நடைபெறவே இல்லை. பெரியால் இந்து தெய்வங்களை நிர்வாணமாக எடுத்துவரவில்லை என்று திமுகவின் தீவிர ஆதரவாளர் சுப வீரபாண்டியன் ஒரு அறிக்கை வெளியிட்டார்.

துக்ளக் விழாவில் ரஜினி பேசி முடித்து சுமார் 4 நாட்களுக்கு பிறகு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளதன் பின்னணியில் முக்கிய கட்சி ஒன்று இருப்பதாக பேச்சு அடிபடுகிறது.

கடந்த வாரம் செவ்வாய் கிழமை சென்னையில் நடைபெற்ற விழாவில் பேசிய ரஜினி, 1971ம் ஆண்டு சேலத்தில் நடந்த திக ஊர்வலத்தில் இந்து தெய்வங்களை நிர்வாணமாக எடுத்து வந்து செருப்பால் அடித்ததாக கூறியிருந்தார். இந்த பேரணிக்கு தந்தை பெரியால் தலைமை தாங்கியதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். ஆனால் அப்படி ஒரு நிகழ்வு நடைபெறவே இல்லை. பெரியால் இந்து தெய்வங்களை நிர்வாணமாக எடுத்துவரவில்லை என்று திமுகவின் தீவிர ஆதரவாளர் சுப வீரபாண்டியன் ஒரு அறிக்கை வெளியிட்டார்.

இதனை தொடர்ந்து 2 நாட்களுக்கு பிறகு இந்த விவகாரத்தில் பெரியாரை ரஜினி அவதூறு செய்துவிட்டதாக கூறி கோவை கு ராமகிருஷ்ணன் தலைமையிலான தந்தை பெரியார் திராவிடர் கழகம் பிரச்சனையை துவக்கியது. பெரியாரை இழிவுபடுத்திய ரஜினி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அமைப்பினர் கோவையில் முதலில் புகார் அளித்ததனர். பிறகு தமிழகம் முழுவதும் முக்கிய ஊர்களில் இந்த புகார் அளிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் இதை எல்லாம் ரஜினி கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் பெரியார் குறித்து தவறாக பேசியதற்கு ரஜினி மன்னிப்பு கேட்கவில்லை என்றால் 23ந் தேதி சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டை முற்றுகையிட உள்ளதாக கு ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார். கு. ராமகிருஷ்ணனையும் சேர்த்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தல் மொத்தமே 100 பேர் தான் உறுப்பினர்களாக இருப்பார்கள் என்று சொல்கிறார்கள்.

ஆனால் போயஸ் கார்டன் அருகே உள்ள ஏரியாவில் ரஜினி ரசிகர்கள் ஏராளனம். எனவே ராமகிருஷ்ணன் முற்றுகையிட வந்தால் அங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆனால் இதைப்பற்றி கவலைப்படாமல் ராமகிருஷ்ணன் ரஜினி வீட்டுக்கு போராட வர உள்ளதாக கூறியதன் பின்னணியில் வழக்கம் போல் அந்த முக்கிய கட்சி உள்ளதாக சொல்கிறார்கள். பெரியாருக்கு எதிராக ரஜினி பேசியதாக ஒரு இமேஜை உருவாக்கி அவரை திராவிட இயக்க எதிர்ப்பாளர் என்கிற தோற்றத்தை உருவாக்கும் சதி என்று சொல்கிறார்கள்.

ஆனால் ரஜினி தரப்பு ஒரு விதத்தில் இந்த சர்ச்சையை விரும்புவதாக சொல்கிறார்கள். பெரியார் ஆதரவாளர்கள் எதிர்க்கிறார்கள் என்றாலே இந்துக்களின் ஓட்டுகள் கேட்காமலேயே வந்துவிடும் என்று ரஜினி ஆதரவாளர்கள் கூறி சிரிக்க, இந்த விஷயத்தை வைத்து ரஜினியை தெருவுக்கு கொண்டு வரும் உத்வேகத்துடன் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறதாம் அந்த முக்கிய எதிர்க்கட்சி.

click me!