கிருஷ்ணகிரியில் நடக்கும் பிரமாண்ட இணைப்பு விழா!! திமுகவில் இணையும் 20,000 ரஜினி ரசிகர்கள்...

By sathish kFirst Published Feb 23, 2019, 11:13 AM IST
Highlights

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர் டி.மதியழகன் தனது ஆதரவாளர்கள் மற்றும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பிரமாண்டமாக நடக்கும் கூட்டத்தில் இன்று திமுகவில் இணைகின்றனர்.

ரஜினியின் இந்த பயங்கர பிஸி ஷெடியூலால் இப்போது கட்சி ஆரம்பிக்கப்போவதில்லை எனத் தெளிவாக தெரிகிறது,  உற்சாகமாக இருந்த ரசிகர்கள் டல்லாகிப் போனதால், திமுக அதிமுக என பல கட்சிகளுக்கு தாவி வருகின்றனர். இதன் முதல்கட்டமாக  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உடைந்தது ரஜினி மக்கள் மன்றம்.

கடந்த 9 ஆம் தேதி, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர் டி.மதியழகன் தனது ஆதரவாளர்கள் மற்றும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் திமுகவில் இணைந்ததையடுத்து இன்று நடக்கும் பிரமாண்டக் கூட்டத்தில் 20,000 ரஜினி மன்றத்தினர் திமுகவில் இணைய உள்ளனர்.

ரஜினி மக்கள் மன்ற முக்கிய நிர்வாகிகள் சுமார் 350 பேருடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 9 ஆம் தேதி திமுகவில் இணைந்த மதியழகன் இணைந்தார். மேலும்,  மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் எம்.ரஜினிகுமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப் அணிச் செயலாளர் எம்.கேவராஜ், மாவட்ட துணைச் செயலாளர் இ.ஜெகவீரபாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.டி.மகேந்திரன், கே.வி.பாஸ்கரன், மாவட்ட வர்த்தகர் அணிச் செயலாளர் எஸ்.ராஜா, மாவட்ட விவசாய அணிச் செயலாளர் எஸ்.பெரியசாமி, எஸ். ஜெயராஜ் உள்ளிட்ட 350க்கும் மேற்பட்ட கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மற்றும் அனைத்து ஒன்றிய, நகர, பேரூர் ரஜினி மன்ற நிர்வாகிகள் - அணி நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.

இந்நிலையில், இன்று  கிருஷ்ணகிரியில் பிரமாண்டமாக நடைபெறும் சிறப்பு கூட்டத்தில் 20 ஆயிரம் பேரை திமுகவில் இணையவுள்ளதாக சொல்லப்பட்டது. இதற்காக, கிருஷ்ணகிரியில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை நடக்கும் இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட திமுகவினர் மற்றும் கூட்டணிக்கட்சி தொண்டர்கள் பங்கேற்கவுள்ளனர்.

கிருஷ்ணகிரி பகுதியிலுள்ள அஞ்செட்டி, ஊத்தங்கரை, காவேரிப்பட்டினம், கிருஷ்ணகிரி, கெலமங்கலம், சூளகிரி கிழக்கு, சூளகிரி மேற்கு, தளி, பர்கூர், மத்தூர், வேப்பனப்பள்ளி ஆகிய பகுதிகளிலுள்ள ரஜினி மக்கள் மன்றத்தினர் சுமார் 20000 பேர் இணைகின்றனர்.

click me!