அதிமுக – தேமுதிக கூட்டணி இருக்கா ? இல்லையா ? கடுப்பான கேப்டன் !! அடுத்தடுத்த அதிர்ச்சி முடிவு !!

By Selvanayagam PFirst Published Feb 23, 2019, 10:16 AM IST
Highlights

அதிமுகவுடன் நடத்தப்பட்டு வரும் கூட்டணி பேச்சு வார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடிப்பதால் கடுப்பான தேமுதிக, இதற்கு மேலும் பொறுக்க முடியாத என சில அதிரடி முடிவுகளை எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக – பாமக- பாஜக  கூட்டணி அமைந்துள்ள நிலையில் தேமுதிகவை அந்தக் கூட்டணியில்  இணைக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால் பேச்சு தொடர்ந்து நான்கு நாட்களுக்கு மேலாக இழுத்து வருவதால் அடுத்த கட்ட முடிவு குறித்து அக்கட்சி ஆலோசனை நடத்தி வருகிறது.

இதனிடையே திமுக தரப்பிலிருந்து கூட்டணிக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. நேற்று ஸ்டாலின்  விஜயகாந்த்தை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்த நிலையில் தற்போது திமுக-தேமுதிக கூட்டணியா ? என பேச்சு எழுந்துள்ளது.

இந்நிலையில் திமுகவுடன் கூட்டணி அல்லது  தனித்துப் போட்டி என்ற இரு முடிவுகளில் ஒன்றை எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுக கூட்டணியில் தே.மு.தி.க.,வுக்கு, ஒன்பது தொகுதிகள் வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது.இதில் உடன்பாடு ஏற்படுவதற்கு முன், பா.ம.க.,வுடன் கூட்டணியை, அ.தி.மு.க., மேலிடம் உறுதி செய்தது. பா.ம.க.,வுக்கு, ஏழு லோக்சபா தொகுதிகளை ஒதுக்கியது மட்டுமின்றி, ஒரு ராஜ்யசபா, எம்.பி., பதவியும் தரப்படும் எனவும், உத்தரவாதம்அளித்தது.

இது, தே.மு.தி.க., தலைமைக்கு, அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, 'பா.ம.க.,வை விட, ஒரு தொகுதியாவது கூடுதலாக வழங்க வேண்டும்' என, திடீர் நிபந்தனை விதிக்க துவங்கியது. அ.தி.மு.க., தரப்பில் பேச்சு நடத்திய, அமைச்சர்கள், தங்கமணி, வேலுமணி ஆகியோர், இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.
இதையடுத்து தொடர்ந்து இழுபறி நீடீப்பதால்  , 40 நாடாளுமன்ற  தொகுதிகளிலும் தனித்து போட்டியிட, கட்சியினரிடம் மனு வாங்கும் முடிவுக்கு, தே.மு.தி.க., வந்துள்ளது.

இதையடுத்து, நேற்று விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'தே.மு.தி.க., சார்பில், நாடாளுமன்றத்  தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள், கட்சி அலுவலகத்தில், விருப்ப மனு பெறலாம்' என, கூறியுள்ளார்.மேலும், 'பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை, மார்ச், 6 மாலை, 5:00 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும். 

பொது தொகுதிக்கு, 20 ஆயிரம் ரூபாய், தனி தொகுதிக்கு, 10 ஆயிரம் ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும்' எனவும், அவர் கூறியுள்ளார்.
அதே நேரத்தில் மற்றொருபுறம் திமுகவுடனும், அதிமுகவுடனும் பேச்சு நடத்தி வருவதால் எந்த முடிவும் எடுக்க முடியாமல் தேமுதிக உள்ளது. இதில் என்ன முடிவு எடுப்பார்கள் என்பது இனனும் ஓரிரு நாளில் தெரியவரும்.

click me!