அண்ணாத்த ரிலீசுக்கு முன் ரஜினி டிச்சார்ஜ் ..?? ஒய்.ஜி மகேந்திரன் நம்பிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Oct 29, 2021, 10:33 AM IST
Highlights

அதாவது எம்ஆர்ஐ ஸ்கேன் செய்யப்பட்டதில் ரஜினிக்கான இன்பாக்ட் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்ட தாகவும், ஆனால் எந்த இடத்தில் பாதிப்பு என்பதை கூட முடியவில்லை என்று மருத்துவ வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகின்றன. 

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் நல்லமுறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார் என்றும் அண்ணாத்த திரைப்படத்திற்கு முன் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி இருப்பார் என்றும் ஒய். ஜி மகேந்திரன் கூறியுள்ளார். நடிகர்  ரஜினிகாந்த்துக்கு பக்கவாத பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் ஒய்.ஜி மகேந்திரன் இவ்வாறு கூறியுள்ளார். இது ரஜினியின் ரசிகர்கள் மத்தியில் ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய திரைத்துறையில் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது கடந்த திங்கட்கிழமை அன்று டெல்லியில் நடந்த தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்த்துக்கு வழங்கப்பட்டது. அமிதாப்பச்சன், சிவாஜி கணேசன் போன்ற ஆளுமைகள் பெற்ற விருதை ரஜினிகாந்த் பெற்றது அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தையும், கொண்டாட்டத்தையும் ஏற்படுத்தியது. விருது பெற்று மிகுந்த மகிழ்ச்சியுடன் சென்னை திரும்பினார் ரஜினி. நேற்று முன்தினம் அண்ணாத்த திரைப்படத்தை தனது பேரக் குழந்தைகளுடன் பார்த்ததாகவும், வூட் செயலி மூலம் பதிவிட்டிருந்தார். அந்தச் செய்தி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இந்த ஆரவாரமும், மகிழ்ச்சியும் அடங்குவதற்குள் நேற்று மாலை திடீரென சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ரஜினி.

70 வயதாகும் நடிகர் ரஜினிகாந்த்துக்கு ஏற்கனவே சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதுவே அவரின் அரசியல் பிரவேசத்திற்கு பெரும் தடையாகவும் அமைந்ததாக அப்போது கூறப்பட்டது. இந்நிலையில் ஆண்டுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது வழக்கமான ஒன்று என்று, நேற்று மாலை அவரது மனைவி லதா ரஜினிகாந்த் கூறியிருந்தார். ரசிகர்களும் இது வழக்கமான பரிசோதனை தான் என்று ஆசுவாசம் அடைந்தனர். அதேநேரத்தில் லேசான காய்ச்சல் இருந்ததால், நேற்று மாலை காவிரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் மாறாக நடிகர் ரஜினிகாந்த் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியானது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தியது. வழக்கத்திற்கு மாறாக நடிகர் ரஜினிகாந்துக்கு நேற்று இரவு முழுவதும் ஐசியூவில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்: முல்லைப் பெரியாறு அணை விவகாரம்; தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட நடவடிக்கை.. ஓபிஎஸ் வலியுறுத்தல்

இதைத்தொடர்ந்து காவிரி மருத்துவமனையில் செய்தியாளர்கள் குவிந்தனர், நடிகர் ரஜினிகாந்த்துக்கு ரத்தநாள திசு அழிவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் கூறுகின்றன, அதாவது இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்களில் போதிய ரத்தம் செல்லாததால் திசுக்கள் இறந்துபோகும் " இன்பார்க்ட்" என்ற பாதிப்பு அவருக்கு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது, ரத்தக் குழாயில் அடைப்பு, ரத்த பாதை தானாகவே சுருங்குதல், ரத்தக்குழாயில் ஏற்படும் வெளிப்புற அழுத்தம், ஆகியவை இவற்றின் அறிகுறிகளாகும், இந்த அதிர்ச்சி ஒரு புறம் இருக்க அதிகாலை வேளையில் ரஜினிக்கு பக்கவாதம் ஏற்பட்டு இருப்பதாகவும் அவரை வெளிநாடு அழைத்துச் சென்று சிகிச்சை மேற்கொள்ள அனுமதி கேட்கப்பட்டிருப்பதாகவும் தகவல் பரவி பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இது முற்றிலும் தவறான தகவல் என்று மருத்துவர்கள் தரப்பில்  மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் ரத்தநாள திசு அழிவு பாதிப்பு குறித்து மறுப்போதும் மருத்துவர்கள் தரப்பில் இருந்து தரப்படவில்லை. 

அதாவது எம்ஆர்ஐ ஸ்கேன் செய்யப்பட்டதில் ரஜினிக்கான இன்பாக்ட் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்ட தாகவும், ஆனால் எந்த இடத்தில் பாதிப்பு என்பதை கூட முடியவில்லை என்று மருத்துவ வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகின்றன. ஆனால் இது பயன்படக்கூடிய ஒன்று அல்ல, சிறுநீரக பாதிப்புள்ள வயது முதிர்ந்தவர்களுக்கு வரும் வழக்கமான பிரச்சினை தான் என்றும் கூறப்படுகிறது, ரஜினி சிறுநீரக சிகிச்சை அறுவை சிகிச்சை செய்து 10 ஆண்டுகள் ஆகின்றன, எட்டு ஆண்டுகள் வரை எந்த பாதிப்பும் இருக்காது, ஆனால் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அவருக்கு மருத்துவர்கள் தரப்பில் இருந்து அறிவுறுத்த பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரஜினிக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு அவரது ரசிகர்களை நிலைகுலைய வைத்துள்ளது. மொத்த சினிமாவுக்குமே அவர் முழுக்கு போட வேண்டிய நிலை உருவாகி விடுமோ என்ற கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள நடிகர்  ரஜினிகாந்த் குறித்து நடிகரும் அவரது உறவினரான ஒய்ஜி மகேந்திரன் பேட்டி கொடுத்துள்ளார். காவேரி மருத்துவமனை வளாகத்தில் ஒய் ஜி மகேந்திரன் கூறியதாவது,

இதையும் படியுங்கள்: தமிழ்நாட்டுக்கு சொந்தமான முல்லைப்பெரியாறு அணை.. முறையாக இயக்கப்படுகிறது. துரை முருகன் அறிக்கை.

நடிகர் ரஜினிகாந்தை நேரில் பார்த்தேன் அவர் அறையில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார் அவருக்கு அளிக்கப்பட்டு கொண்டிருக்கும் சிகிச்சை பற்றி எனக்கு தெரியாது ஆனால் தீபாவளிக்கு வெளியாக இருக்கும் அண்ணாத்த திரைப்படத்திற்கு அவர் மருத்துவமனையில் இருந்து வெளியாகி இருப்பார் உறவினர் என்ற முறையில் பார்க்க வந்துள்ளேன் என்றார். அதாவது நடிகர் ரஜினிகாந்திற்கு இன்னும் நான்கு நாட்களாவது சிகிச்சை வழங்கப்படும் என்பது இதன்மூலம் தெரியவந்துள்ளது இதற்கிடையில்  ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினி நலமாக இருப்பதாகவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

click me!