மதுரையில் ரஜினி கட்சி தொடங்குகிறார் ரஜினி .!!??

By Thiraviaraj RMFirst Published Feb 9, 2020, 1:41 PM IST
Highlights

எம்ஜிஆர்க்கு  அரசியல் பரிணாமம் ஏற்பட்டது மதுரை தான். விஜயகாந்த்,தேமுதிகவை மதுரையில் தான் தொடங்கினார்.சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சியை இங்கிருந்து தான் தொடங்கினார். கமல், மக்கள் நீதி மய்யம் கட்சியை மதுரையில் இருந்து தான் தொடங்கினார். மதுரைக்கும் அரசியல் கட்சிக்கும் சென்டிமென்ட் உண்டு. ஏன், பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தாமரை மாநாடு மதுரையில் தொடங்கியது. இந்த பட்டியலில் ரஜினியும் தன்னுடைய கட்சியை மதுரையில் தொடங்க இருக்கிறார்.


 "புலிவருது ,புலி வருதுனு" சொல்லுற மாதிரி இருக்கு ரஜினி கட்சி ஆரம்பிக்கிறது. நான் எப்ப எப்படி வருவேன்னு சினிமாவுல ரஜினி சொல்லும் டயலாக் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. ரஜினி ஏப்ரல் மாதம் மதுரையில் அரசியல் கட்சியை  தொடங்க இருப்பதாக தகவல்கள் உலாவரத் தொடங்கி இருப்பது ரசிகர்கள் மத்தியில் புது ரத்தம் பாய்ச்சப்பட்டது போல் இருக்கிறதாம்.

நடிகர் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவதாக 2018-ம் ஆண்டில் அறிவித்தார். 2021 சட்டமன்றதேர்தலில் போட்டியிடப்போவதாகவும் அறிவித்திருந்தார்.நிர்வாகிகளை சந்தித்துப் பேசுவது, நலத்திட்ட உதவிகளை வழங்குவது என்று கட்சியை தொடங்குவதற்கான ஆரம்ப பணிகளை தொடர்ந்து வந்தார்.இதற்கு இடையில் இவருடைய ஜாதக கட்டம் சரியாக ஒத்துவரவில்லை.அதுனாலேயே அரசியல் கட்சியை ஆரம்பிக்க காலம் தாழ்த்திக்கொண்டே வந்தார் ரஜினி. குரு,சனி பெயர்ச்சிக்கு பிறகு புது அவதாரம் எடுத்திருக்கிறார் ரஜினி.

மதுரையை விட்டு அரசியல் ,சினிமா இந்த இரண்டையும் பிரிக்க முடியாது.அந்த அளவிற்கு காலம்காலமாக அரசியல் கட்சிகள் இங்கிருந்து தான் உதயமாகி இருக்கின்றது. அந்த வகையில், எம்ஜிஆர்க்கு  அரசியல் பரிணாமம் ஏற்பட்டது மதுரை தான். விஜயகாந்த்,தேமுதிகவை மதுரையில் தான் தொடங்கினார்.சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சியை இங்கிருந்து தான் தொடங்கினார். கமல், மக்கள் நீதி மய்யம் கட்சியை மதுரையில் இருந்து தான் தொடங்கினார். மதுரைக்கும் அரசியல் கட்சிக்கும் சென்டிமென்ட் உண்டு. ஏன், பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தாமரை மாநாடு மதுரையில் தொடங்கியது. இந்த பட்டியலில் ரஜினியும் தன்னுடைய கட்சியை மதுரையில் தொடங்க இருக்கிறார். அதற்கான பணிகளை அரசியல் கட்சிப்பணிகளை கவனிக்கும் டீம் தயாராகிக்கொண்டிருக்கிறது. அரசியல்கட்சி ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் ரஜினிக்கு கட்சி ஆரம்பிப்பது,அதன் வளர்ச்சிக்கான டிப்ஸ்களை வழங்குவார் என்று அவரது நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள்.


பாஜக அரசுக்கு ஆதரவான பேச்சு, பெரியார் குறித்த கருத்து என்று சமீபத்தில் ரஜினிகாந்த் விமர்சனத்திற்கு உள்ளானார். இந்த நிலையில், இந்நிலையில் தமிழருவிமணியன் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில்...,அவரது அரசியல் ஆலோசகராக கருதப்படும் தமிழருவி மணியன், ஆங்கில  நாளிதழுக்கு அவர், ரஜினியின் அரசியல் பற்றி  பேட்டி அளித்துள்ளார்.


 வரும் ஏப்ரல் மாதம் கட்சி தொடங்கும் ரஜினிகாந்த், ஆகஸ்டில் பிரமாண்ட மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து செப்டம்பர் மாதம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பாஜகவுடன் கூட்டணி குறித்து ரஜினி தான் முடிவு செய்வார் என்றும் , அமமுகவுடன் கூட்டணி வைத்தால் வாக்குகள் கிடைக்காது என்று ரஜினி நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

TBalamurukan


 

click me!