ரஜினியின் ஒரு பட சம்பளம்..! யம்மாடியோவ்...! ச்சும்மா தல சுத்த வைக்கும் சீமான்..!

By Vishnu PriyaFirst Published Feb 9, 2020, 12:42 PM IST
Highlights

நடிகர் விஜய்யை விட அதிகம் சம்பளம் வாங்குவது யார் என்பது உங்களுக்கு தெரியும். ஒரு படத்திற்கு 126 கோடி ரூபாய், ஜி.எஸ்.டி. வரியோடு வாங்கியுள்ளார். அவரது வீட்டுக்கு வருமான வரித்துறையினர் ஏன் போகவில்லை?-சீமான் (நாம் தமிழர் கட்சி தலைவர்)

* பட்ஜெட்டில் முக்கியமான அறிவிப்புகள் எதுவும் இல்லையென சிலர் கூறுகின்றனர். ஆனால் பொருளாதார வளர்ச்சியை தூண்டிவிடக்கூடிய உள்ளார்ந்த விஷயங்கள் பட்ஜெட்டில் அதிகம் உள்ளன. நுகர்வை அதிகரிப்பது, முதலீட்டை அதிகரிப்பது போன்ற விஷயங்கள் பட்ஜெட்டில் உள்ளன. -    நிர்மலா சீதாராமன் (மத்திய நிதியமைச்சர்)

* குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடக்கும் போராட்டங்கள் குறித்து நான் தெரிவித்த கருத்தை புரிந்து கொள்ளாமல், சில விஷயங்களை மட்டும் பாராளுமன்றத்தில் கூறியுள்ளார் பிரதமர் மோடி. இது  கடும் கண்டனத்துக்கு உரியது. உண்மைக்கு புறம்பான கருத்துக்களை கூறக்கூடாது. தான் தெரிவித்த கருத்துக்களை பிரதமர் திரும்பப் பெற வேண்டும். -பினராயி விஜயன் (கேரள முதல்வர்) 

Latest Videos

* அரசாங்கத்துக்கு எதிராக பொய்ப் பிரசாரங்களை ஸ்டாலின் பரப்பி வருகிறார். யார் தங்களுக்காக உழைக்கின்றனர், யார் துரோகம் செய்கின்றனர் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். தேர்தலின் போது மக்கள் இந்த நபர்களுக்கு பாடம் புகட்டுவார்கள். - ஆர்.பி.உதயகுமார் (தமிழக அமைச்சர்)

* நடிகர் விஜய் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தியதை எதிர்க்கவில்லை. ஆனால் சோதனை என்ற பெயரில், சினிமா படப்பிடிப்பில் இருந்த விஜய்யை காரில் அழைத்துச் சென்று விசாரிக்கின்றனர். அவர் ஒன்றும் பயங்கரவாதி இல்லை. தனது படத்தில் பா.ஜ.க.வை அவர் விமர்சித்திருந்த காரணத்தால் அவரை சோதனை எனும் பெயரில் மிரட்டுவதாகவே சந்தேகம் எழுந்துள்ளது. -பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் மாநில செயலாளர்)

* வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வனப்பகுதிக்கு சென்றபோது, காலில் கொடி சிக்கியது. முதுமை காரணமாக அவரால் குனிய முடியவில்லை. எனவே அருகிலிருந்த சிறுவனை அழைத்து, காலில் சிக்கிய கொடியை அகற்றும்படி கூறியுள்ளார். இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை. -ஜெயக்குமார் 

* பிரதமர் மோடி பார்லிமெண்டில் பேசும்போது பாக்கிஸ்தான் பற்றியும், நேரு பற்றியும் குறிப்பிட்டார். ஆனால் நாட்டில் நிலவும் வேலை வாய்ப்பின்மை பற்றியும், அதை தீர்ப்பதற்கான நடைமுறை பற்றியும் எதுவுமே குறிப்பிடவில்லை. கடந்த  ஐந்தாண்டுகளில் ஒரு கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். -ராகுல்காந்தி (காங்கிரஸ் எம்.பி.)

* ரஜினிகாந்த் நல்ல நடிகர். ஆனால் ரசிகர்களிடம் தற்போது அவரது நடிப்பு எடுபடவில்லை. எனவே தன் புதிய படங்கள் வெளியாகும் போதெல்லாம், அரசியல் கருத்துக்களை கூறி, படத்தை வெற்றி பெற வைக்க முயற்சிக்கிறார். அவர் அரசியல் கட்சியை துவக்கப்போவதேயில்லை. -முத்தரசன் (இ.கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்)

* தமிழகம், மின் வெட்டே இல்லாத மின் மிகை மாநிலமாக உருவாக்கப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளில் 480 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மின் கோபுரங்கள் அமைக்க நிலம் தந்த விவசாயிகளுக்கு விரைவில் இழப்பீடு வழங்குவதற்கான பணிகள் முடிக்கப்படும். - தங்கமணி (மின் துறை அமைச்சர்)

*டி.என்.பி.எஸ்.சி., தேர்வு முறைகேடில் தேடப்பட்டு வந்த முக்கிய இடைத்தரகர் ஜெயக்குமார், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் திடீரென சரணடைந்திருப்பது ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி தருகிறது. சி.பி.சி.ஐ.டி. போலீஸார் அவரை தேடுகின்றார்கள் என்ற செய்தி வெளி வந்த நேரத்தில், சென்னையிலேயே அவர் சரணடைந்துள்ளார். இந்த  தேர்வு முறைகேடால் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. -துரைமுருகன் (தி.மு.க. பொருளாளர்)

* நடிகர் விஜய்யை விட அதிகம் சம்பளம் வாங்குவது யார் என்பது உங்களுக்கு தெரியும். ஒரு படத்திற்கு 126 கோடி ரூபாய், ஜி.எஸ்.டி. வரியோடு வாங்கியுள்ளார். அவரது வீட்டுக்கு வருமான வரித்துறையினர் ஏன் போகவில்லை?-சீமான் (நாம் தமிழர் கட்சி தலைவர்)

click me!