ஊற வைத்து உறியடி கொடுத்த எடப்பாடி... பா.ஜ.க., சகவாசத்தால் ராஜேந்திர பாலாஜியின் அமைச்சர் பதவிக்கும் ஆப்பு..?

By Thiraviaraj RMFirst Published Mar 23, 2020, 11:07 AM IST
Highlights

தனது பேச்சு, நடவடிக்கைகளை ராஜேந்திரபாலாஜி குறைத்துக் கொள்ளவில்லை என்றால் அவரது அமைச்சர் பதவியும் விரைவில் காலியாகலாம் என்பதே இப்போது அதிமுக தலைமை போட்டு வைத்திருக்கும் திட்டம். 

அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக தமிழக ஆளும் கட்சியுடன் இணக்கமாக இருந்த பாஜக நிர்வாகிகள், அதிமுக பெரும்புள்ளிகளை சந்தித்து உங்களுக்கு நாங்கள் ஆதரவு அளிப்பதுபோல், எங்களுக்கும் சில விஷயங்களில் நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும் எனக் கேட்டுள்ளனர். ஆனால், பா.ஜ.க.,வினர் எவ்வளவு பேசியும் அதிமுகவினர் கண்டு கொள்ளவில்லை. 

இதற்கு தலையசைத்த ஒரே ஒருவர் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மட்டுமே. பாஜகவுக்காக பயங்கரமாக வாய்ஸ் கொடுத்து வந்தார். தேசிய அளவிலான பிரச்னைகளுக்கும் கோபம் தெறிக்க பேசியவரின் நடவடிக்கைகளை ஆளும் கட்சி தலைமை கண்கொத்தி பாம்பாக கவனித்தது. ஒருபக்கம் வெளிப்படையாக மத்திய அரசின் நடவடிக்கைகளை ஆளும் கட்சி பாராட்டினாலும், உள்ளுக்குள் தாமரை இலை தண்ணீராக இருக்கவே அதிமுக நினைக்கிறது.

குறிப்பாக இந்திய குடியுரிமை சட்டம், மக்கள் தொகை கணக்கெடுப்பு போன்றவற்றால் மத்திய, மாநில அரசுகளின் மீது மக்கள் கோபம் கொண்டுள்ளனர். இதனை தடுக்கும் வகையில் மத்திய தலைமையிடம், ‘உங்கள் கட்சி பிரமுகர்களை கொஞ்சம் அமைதியாக இருக்கச் சொல்லுங்கள். சில விஷயங்களை தள்ளிப்போடுங்கள். நமக்குள் அரசல் புரசலாக ‘உரசல்‘ ஏற்பட்டாலும் இரண்டு கட்சிக்கும் பெயர் கெட்டுவிடும், என்று கூறி இருக்கின்றனர்.

இதனையடுத்து தமிழகத்தில் உள்ள பாஜகவினர் சைலண்டு மோடுக்கு சென்று விட்டனர்.  பாஜகவினரே சைலண்ட் மோடுக்கு சென்ற பிறகும் ராஜேந்திர பாலாஜி ரவுசு காட்டாமல் தானே இருந்திருக்க வேண்டும்? ஆனால், கடந்த சில வாரங்களுக்கு முன் ராஜேந்திந்திரபாலாஜி ஆதரவாளர்கள் விருதுநகரில் பிரபல வார இதழின் நிருபர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினர். 

அதிமுகவில் செல்வாக்கான பதவியில் இருந்துவந்தவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடர்ந்து பல்வேறு அதிரடிகருத்துக்களை துணிவாக எடுத்து கூறிவந்தவர் இந்நிலையில் ராஜேந்திரபாலாஜியின் பேச்சிற்கு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தினர். அடுத்து கொரோனா குறித்து ராஜேந்திர பாலாஜி போட்ட டிவிட்டும் சர்ச்சையை கிளப்பியது.

இஸ்லாமியர்களை சமாதானப்படுத்தும் பொருட்டு எடப்பாடி பழனிசாமி ராஜேந்திர பாலாஜியின் மாவட்ட செயலாளர் பொறுப்பை நீக்கியுள்ளதாகவும் விரைவில் அவரது அமைச்சர் பதவியும் பறிக்கப்படும் என கூறப்படுகிறது.

இந்து அமைப்புகளில் சிலர் எடப்பாடியை மிகப்பெரிய அளவில் புகழ்ந்து சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவித்துவந்த நிலையில் மொத்தமாக ஆப்பு வைத்து நானும் சராசரி திராவிட அரசியல்வாதி என்பதனை உறுதிப்படுத்தியதாக புலம்பி வருகின்றனர் ராஜேந்திர பாலாஜி ஆதரவாளர்கள். கொரோனா செய்தியில் மக்கள் மூழ்கி இருப்பதால் ராஜேந்திர பாலாஜி நீக்கம் நமக்கு எந்த எதிர்ப்பையும் கொடுக்காது என எடப்பாடி கணக்கு போட்டு நீக்கம் செய்ததாக கூறப்படுகிறது.

மீறி தனது பேச்சு, நடவடிக்கைகளை ராஜேந்திரபாலாஜி குறைத்துக் கொள்ளவில்லை என்றால் அவரது அமைச்சர் பதவியும் விரைவில் காலியாகலாம் என்பதே இப்போது அதிமுக தலைமை போட்டு வைத்திருக்கும் திட்டம். 

click me!