தமிழக முதலமைச்சருக்கு சபாஷ் போட்ட அரசுப்பள்ளி ஆசிரியர்கள்..!! கிருமி நாசினி தெளிக்க வேண்டுகோள்...!!

By Ezhilarasan BabuFirst Published Mar 23, 2020, 11:02 AM IST
Highlights

 தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் தடுத்திட.  பள்ளிகள்,கல்லூரிகள்,விளையாட்டு அரங்குகள், மால்கள்  உள்ளிட்ட மக்கள்கூடும் இடங்களை மார்ச் 31 வரை விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருவது வரவேற்புக்குரியது.
 

கொரோனா வைரஸ்  பரவாமல் தடுக்க அனைத்துப்பள்ளிகளுக்கும் தினந்தோறும் கிருமிநாசினி தெளிக்க வேண்டும் என  தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.  உலகம் முழுவதும் அச்சுறுத்திக் கொண்டிருப்பதும். எளிதில் தொற்றும் கொரோனா வைரஸ் சீனாவில் தொடங்கி இத்தாலி ஈரான் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட.  நாடுகளில் விஸ்வரூபம் எடுத்து இந்தியாவையும் விட்டுவைக்க வில்லை.  கர்நாடகா, டெல்லி,  பஞ்சாப், மும்பை உள்ளிட்ட ஏழு பேரை பலிவாங்கியுள்ளது.  

இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் தடுத்திட.  பள்ளிகள்,கல்லூரிகள்,விளையாட்டு அரங்குகள், மால்கள் உள்ளிட்ட மக்கள்கூடும் இடங்களை மார்ச் 31 வரை விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருவது வரவேற்புக்குரியது.
 தற்போது கொரோனா தமிழ்நாட்டினை தாக்காமல் தடுத்திட வகையில் பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசு சிறப்பாக எடுத்துவருகிறது என்பது மிகையாகாது. மேலும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கையினை ஏற்று அச்சத்தைத் தவிர்க்கும் வகையிலும் தன்னம்பிக்கையோடு வருவதற்கு தேர்வெழுதும்  11,12, ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், தேர்வுப்பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க தேர்வு மையங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

 

ஆனால் பள்ளிகளுக்கு வரும் ஆசிரியர் அலுவலகப் பணியாளர்களின் பாதுகாப்புக்கருதி  தினந்தோறும் அனைத்துப்பள்ளிகளுக்கும் கிருமிநாசினி தெளிக்கா வேண்டுகிறோம்.  தற்போது தலைமைச்செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  கிருமி நாசினி தெளிப்பதுபோல தமிழ்நாட்டில் இயங்கும் அனைத்துப்பள்ளி களுக்கும் கொரோனா தொற்றாமல் பாதுகாக்க கிருமிநாசினி தெளிக்க ஆவனசெய்யவேண்டி மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில்  வேண்டுகின்றோம் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.  
 

click me!