முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் தந்தை மறைவு.. எடப்பாடி பழனிசாமி இரங்கல்..!

By vinoth kumarFirst Published Apr 18, 2023, 11:08 AM IST
Highlights

கடந்த சில நாட்களுக்கு தவசலிங்கத்திற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து மதுரையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்  சிகிச்சை பலனின்றி காலமானார். 

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் தந்தை மறைவுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதிமுக ஆட்சிக் காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக பதவி வகித்த கே.டி.ராஜேந்திர பாலாஜி. தற்போது விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளராகவும் இருந்து வருகிறார். இவரது தந்தை தவசலிங்கம்(93).  வயது மூப்பு காரணமாக அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு தவசலிங்கத்திற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து மதுரையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்  சிகிச்சை பலனின்றி காலமானார். 

இவரது இறுதி சடங்கு திருத்தங்கல் பாலாஜி நகரில் அவரது இல்லத்தில் இன்று மாலை 3 மணியளவில் நடைபெரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் தந்தை மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். 

விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர், கழக அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர், அருமை சகோதரர் திரு.கே.டி.ராஜேந்திரபாலாஜி அவர்களின் தந்தை திரு.தவசிலிங்கம் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். தந்தையை இழந்து வாடும் திரு.கே.டி.ராஜேந்திர பாலாஜி அவர்களுக்கும்… pic.twitter.com/5M2NmENvCo

— Edappadi K Palaniswami (@EPSTamilNadu)

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளடுவிட்டர் பதிவில்;- விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர், கழக அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர், அருமை சகோதரர் திரு.கே.டி.ராஜேந்திரபாலாஜி அவர்களின் தந்தை திரு.தவசிலிங்கம் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். தந்தையை இழந்து வாடும் திரு.கே.டி.ராஜேந்திர பாலாஜி அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும், வருத்தத்தையும் தெரிவிப்பத்தோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்..

click me!