அண்ணாமலை பேச்சுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை. அவர் எதிர்கட்சியாகவும் இல்லாமல், தோழமை கட்சியாகவும் இல்லாமலும், அரசியல் கட்சி தலைவர் என்ற முறையிலும் இல்லாமல் செயல்படுகிறார் என கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
அதிமுக,திமுகவுடன் அண்ணாமலை மோதல்
தமிழகத்தில் திமுக்- பாஜக இடைய தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. திமுக அரசு மீதான தொடர் புகார்களை அண்ணாமலை கூறி வருகிறார். இதன் காரணமாக இரண்டு தரப்பும் மாறி மாறி ஆவேசமாக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் தான் திமுக மூத்த நிர்வாகிகள் சொத்து மற்றும் ஊழல் பட்டியலை அண்ணாமலை வெளியிட்டிருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த திமுக தலைமை 500 கோடி நஷ்ட ஈடு கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆருத்ரா நிறுவனத்தில் 87கோடி ரூபாய் பணம் பெற்றதாக திமுகவினர் கூறி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 500 கோடியே ஒரு ரூபாய் கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்ப இருப்பதாக அண்ணாமலை கூறியுள்ளார்.
அண்ணாமலை பற்றி கேள்வி கேட்காதீர்கள்
இது ஒரு புறம் என்றால் கூட்டணி கட்சியான அதிமுகவுடனும் அண்ணாமலை மோதல் போக்கை கடை பிடித்து வருகிறார். தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம், தனித்து போட்டியிடுவோம், அதிமுக ஆட்சி கால ஊழல் பட்டியலை வெளியிடுவோம் என்று அண்ணாமலை கூறும் கருத்தை அதிமுகவினரும் ரசிக்கவில்லை. இதற்கு பதிலடி கொடுத்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை தொடர்பான கேள்விகளை தன்னிடம் கேட்காதீர்கள். தன்னை முன்னிலை படுத்த வேண்டும் என்பதற்காக ஏதோ பேசி வருகிறார். அவருடைய கருத்திற்கு பதில் அளிக்காமல் இருந்தாலே போதும் என கூறியிருந்தார்.
அண்ணாமலைக்கு முக்கியத்துவம் வேண்டாம்
இந்த நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, அண்ணாமலை பேச்சுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை. அவர் எதிர்கடசியாகவும் இல்லாமல், தோழமை கட்சியாகவும் இல்லாமலும், அரசியல் கட்சி தலைவர் என்ற முறையிலும் இல்லாமல் செயல்படுகிறார். நாம என்ன சொல்ல வருகிறோம், நமது கருத்தால் நம் கட்சி பெருமை சேர்க்க வேண்டும் என்ற உணர்வே அவருக்கு இல்லை. எனவே அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. அவருக்கு அவ்வளவு தான் தெரியும். திமுக அரசுக்கு எதிராக நடை பயணத்தை அண்ணாமலை மேற்கொள்ள இருப்பது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர் அண்ணாமலையின் நடை பயணத்தால் தமிழகத்தில் எந்த மாற்றமுமு் ஏற்பட்டு விடாது. முதலில் அண்ணாமலை உளறுவதை நிறுத்தனும் என கேட்டுக்கொண்டார்.
இதையும் படியுங்கள்
500 கோடி டீலா! திமுக சொத்து இல்லையா.. திமுகவுக்கு 48 மணி நேரம் கெடு விதித்த அண்ணாமலை!