சச்சின் பைலட் வழக்கு... சபாநாயகருக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Published : Jul 21, 2020, 04:24 PM IST
சச்சின் பைலட் வழக்கு... சபாநாயகருக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

சுருக்கம்

சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் மீது வரும் 24ம் தேதி வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் மீது வரும் 24ம் தேதி வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு எதிராக செயல்பட்ட சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் ஆகியோருக்கு கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். கடந்த வெள்ளிக்கிழமைக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் தகுதி நீக்கம் நடவடிக்கை எடுக்கப்படும் என  சபாநாயகர் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், சபாநாயகரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சச்சின் பைலட் சார்பில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், கட்சிக்குள்ளான கருத்து வேறுபாடுகளை இத்தகைய கடும் நடவடிக்கைகளால் ஒடுக்குவது பேச்சு சுதந்திர மீறல் ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது 21ம் தேதி வரை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கதடை விதிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், இது தொடர்பான வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று ராஜஸ்தான் உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் 24ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!